Published : 12 Jun 2019 06:24 PM
Last Updated : 12 Jun 2019 06:24 PM

ஆதரவாளர்கள் எனக்காக போஸ்டர் ஒட்டியது தவறு: அமைச்சர் செங்கோட்டையன்

ஆதரவாளர்கள் எனக்காக போஸ்டர் ஒட்டியது தவறு என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் இன்று (புதன்கிழமை) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை, மக்களவைத் தேர்தலில் தோல்விக்கான காரணங்கள், உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டையில் உள்ள அதிக தலைமை அலுவலகம் முன்பு "அதிமுகவின் புதிய கழகப் பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள்", என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அழைப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதேபோல சிவகங்கையிலும் சென்னையிலும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுச் செயலாளராக வேண்டும் என்று வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ''நான் பொதுச் செயலாளர் ஆகவேண்டும் என்று ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியது தவறு. உயிருள்ள வரை கட்சித் தலைமைக்கு உறுதுணையாக இருப்பேன். என்னுடைய அரசியல் நிலையைப் பொறுத்தவரை முதல்வர், துணை முதல்வருடைய தலைமையில் நடைபெறும் நிர்வாகத்துக்கு ஆதரவாக உள்ளேன். ஊடகங்களில் வரும் செய்திகளைப் பெரிதுபடுத்த வேண்டாம்.

யாரோ போஸ்டர்கள் ஒட்டிவிட்டார்கள் என்பதற்கல்ல, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரின் வழியில் செயல்படும் அரசுக்கு, உயிருள்ள வரையில் உறுதுணையாக இருப்பேன்'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x