Published : 26 Jun 2019 08:26 AM
Last Updated : 26 Jun 2019 08:26 AM

சட்டவிரோத படகு பயணங்களை தடுக்க ஆஸ்திரேலியா அரசின் ஜீரோ சான்ஸ் பிரச்சார திட்டம்

ஆஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக படகு வழியாக நுழை வது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக ‘ஜீரோ சான்ஸ்‘ என்ற பிரச்சாரத் திட் டத்தை ஆஸ்திரேலியா அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் அறிமுக விழா சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துாதரகத்தில் நேற்று நடைபெற்றது. அதன்பின், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மண்டல இயக்கு நர் டாரா கவனா நிருபர்களிடம் கூறியதாவது:

எங்கள் நாட்டின் எல்லைகள் பலத்த கண்காணிப்புகளுடன் மிக வும் பாதுகாப்பாக உள்ளது. எனவே, கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியா வுக்குள் அத்துமீறி யாரும் எளிதில் நுழைய முடியாது. அதேநேரம், தவறான எண்ணமுடைய கடத்தல் காரர்கள் பணம் சம்பாதிப்பதற்காக சில அப்பாவி மக்களை ஏமாற்றி சட்டவிரோதமான கடற்பயணம் மூலம் ஆஸ்திரலியாவுக்குள் நுழைய வைக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுத்து சாதராண மக்க ளின் உயிர்பலியை காக்கும் நோக்கத்தில் ஜீரோ சான்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களிடம் விழிப் புணர்வு பிரச்சாரங்களை மேற் கொண்டு அத்துமீறி கடல் பயணம் செய்வதன் அபாயங்கள் மற்றும் பின்விளைவுகளை எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளோம். படகு வழியாக எல்லைக்குள் நுழை பவர்கள் திருப்பி அனுப்பப்படுவர்.

இதுதவிர, பிடிபடும் பயணி களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப் படும். எனவே, தவறான வாக்குறுதி களை நம்பி மக்கள் ஏமாற வேண் டாம். கடத்தல் மற்றும் சட்ட விரோத பயணங்களை வேராடு அறுக்கும் முயற்சிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை www.australia.gov.au/zerochance என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 2013-ம் ஆண்டு முதல் படகு வழியாக ஆஸ்திரேலி யாவுக்குள் நுழைய முயன்ற 847 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x