Published : 08 Jun 2019 08:21 AM
Last Updated : 08 Jun 2019 08:21 AM

‘இந்து தமிழ்’ சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் வீடு மற்றும் கார், பைக் கண்காட்சி இன்று தொடக்கம்

‘இந்து தமிழ்’ நிறுவனம் ‘ஐ ஆட்ஸ் அண்டு ஈவென்ட்ஸ்’ குழுமத்துடன் இணைந்து நடத்தும் ‘தமிழ்நாடு பிராபர்டி எக்ஸ்போ 2019’ நந்தம் பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் (ஜூன் 8, 9) நடை பெறவுள்ளது. காலை 10 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை இலவசமாக காணலாம்.

சிறந்த கட்டுமான நிறுவனங் கள் தமிழகம் முழுவதும் அமைத் துள்ள கட்டிடங்கள், அடுக்ககங் கள், வில்லாக்கள் பற்றிய விவரங்களை இந்த கண்காட்சியில் ஒரே இடத்தில் அறிந்துகொள்ள முடியும்.

அதிக விலையுள்ள சொகுசு குடியிருப்புகள் முதல், குறைந்த விலையிலான வீடுகள் வரை பார்த்து தங்கள் கனவு இல்லத்தை தேர்வு செய்து வாங்கலாம். முதல் முறை வீடு வாங்க வருபவர்கள் தங்களுக்கு எழும் அனைத்து வகை யான சந்தேகங்களையும் இங்கு போக்கிக் கொள்ள முடியும். வீடு வாங்க கடன் பெறவும் இங்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சிக்கு டாடா ப்ரவீஷ் டோர்ஸ் நிறுவனம் இணை ஸ்பான்ஸராக செயல்படுகிறது.

கார் மற்றும் பைக் கண்காட்சி

அதேபோல ‘ஆட்டோ இந்தியா 2019’ என்ற பெயரில் கார் மற்று்ம் பைக் கண்காட்சியும் சென்னை வர்த்தக மையத்தில் ‘இந்து தமிழ்’ மற்றும் ‘ஐ ஆட்ஸ் அண்டு ஈவென்ட்ஸ்’ குழுமத்தால் நடத்தப் படுகின்றன. இக்கண்காட்சியை காண ரூ.40 கட்டணமாக வசூலிக் கப்படும்.

இதில் முன்னணி 4 சக்கர மற்றும் இரு சக்கர வாகன தயாரிப் பாளர்கள், டயர் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைக்கின்றனர். இக்கண்காட்சிக்கு அப்போலோ டயர்ஸ், சுசூகி, ஃபோர்ட், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் இணை ஸ்பான்ஸர்களாகவும், ஐஓசி லூப்ரிகன்ட் பார்ட்னராகவும் செயல் படுகின்றன.

இந்த கண்காட்சியில் வாடிக்கை யாளர்கள் தாங்கள் வாங்க நினைக் கும் கார், பைக் போன்றவற்றை நேரில் பார்த்து, ஓட்டி, தேவையான விவரங்களை அறிந்து வாங்க முடியும்.

மேலும் பைக்கர்ஸ் ஹேங்அவுட் நிகழ்ச்சி இன்று மாலை 4 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடை பெறவுள்ளது. இதில் 600-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் கிளப்களை சேர்ந்த பைக் பிரியர்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

பயன்படுத்திய கார் கண்காட்சி

மேலும் பயன்படுத்தப்பட்ட கார் கண்காட்சி நாளை (ஜூன் 9) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. டிஎஸ் மகாலிங் கம் அண்டு சன்ஸ், விஜே கார்ஸ் அண்டு டொயோட்டா யூ ட்ரஸ்ட் ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்தப் பட்ட சிறந்த நிறுவனங்களின் கார் களை விற்பனைக்காக காட்சிப்படுத்து கின்றன.

இக்கண்காட்சிகளை சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஏ.அருண், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ், தொலைக் காட்சி புகழ் அர்ச்சனா சந்தோக் ஆகி யோர் தொடங்கி வைக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x