Published : 22 Jun 2019 09:10 AM
Last Updated : 22 Jun 2019 09:10 AM

அருணாச்சல பிரதேச விமான விபத்தில் உயிரிழந்த கோவை வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்

கடந்த 3-ம் தேதி அசாம் மாநிலத்தில் இருந்து விமானப்படை வீரர்கள் 13 பேருடன் அருணாச்சல பிரதேசம் நோக்கி புறப்பட்ட விமானப்படைக்கு சொந்த மான ஏ.ஏன்.32 ரக விமானம், அருணாச் சல பிரதேசத்தின் அடர்ந்த வனப்பகு திக்குள் விழுந்து விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர்.

தொடர் தேடுதலுக்கு பின்னர், உயி ரிழந்த 13 பேரின் உடல் பாகங்கள் சில நாட்களுக்கு முன்னர் மீட்கப்பட்டன. இந்த விபத்தில், கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவரும், கோவை சிங்காநல்லூரில் குடும்பத்துடன் வசித்து வந்தவருமான வினோத் ஹரிஹரன் (32) என்பவரும் உயிரிழந் தார். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்படி, வினோத் ஹரிஹரனின் உடல் கோவைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அசாமில் இருந்து விமானம் மூலமாக சூலூர் விமானப் படைத் தளத்துக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு அதிகாரிகள், வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ராணுவ வாகனம் மூலமாக, சிங்காநல்லூரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. தேசிய மாணவர் படையினர் அஞ்சலி செலுத்திய பின்னர், வினோத் ஹரிஹரனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடலை பெற்றுக்கொண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். வினோத் ஹரிஹரன் உடலுக்கு, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் திருச்சி சாலை சிங்காநல்லூரில் உள்ள மின்மயானத்துக்கு கொண்டுவரப் பட்டு இறுதிச்சடங்கு நடந்தது.

உயிரிழந்த வினோத் ஹரிஹரனின் சகோதரரும், விமானப்படை வீரருமான விவேக் இறுதிச்சடங்குகள் செய்தார். பின்னர், விமானப்படை அதிகாரிகள், மாநகர காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின், 33 குண்டுகள் முழங்க, வினோத் ஹரி ஹரனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட வினோத் ஹரிஹரன், கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி யில் பட்டப் படிப்பு படித்து விட்டு, 2011-ம் ஆண்டு விமானப்படை யில் சேர்ந்தார். விமானப்படையில் ஸ்குவாட் லீடராக பணிபுரிந்துவந்தார்.

கேரளாவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த புயல் வெள்ளத்தின்போது, மீட்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டவர் என பாராட்டப் பட்டார்.

இவருக்கு கடந்த இரண்டரை ஆண்டு களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சூலூர் விமானப்படை தளத்தில் பணி புரிந்துவந்த வினோத் ஹரிஹரன், கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் அசாமுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x