Published : 07 Jun 2019 10:27 AM
Last Updated : 07 Jun 2019 10:27 AM

சேலத்தில் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

சேலத்தில் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ரூ.320 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு மேம்பாலத்தில் ஒரு தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(வெள்ளிக்கிழமை) காலை திறந்துவைத்தார். போக்குவரத்து நெரிசலைத் தடுக்க 2016-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் ஈரடுக்கு மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

சேலம் அஸ்தம்பட்டி ராமகிருஷ்ணா சிக்னல் முதல் ஏ.வி.ஆர் ரவுண்டானா வரையிலான 6.8 கிலோ மீட்டர் நீள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்தப் பகுதியை முதல்வர் திறந்து வைத்தார். இன்னும் 6 மாத காலத்துக்குள் இரண்டாம் தளமும் திறக்கப்படும் எனத் தெரிகிறது

இந்த விழாவில்,  திமுக எம்.பி.எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, "நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் நல்ல தீர்ப்பு வந்தவுடன் 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும். எந்த ஒரு தனிநபருக்காகவும் 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டவில்லை. உலகத்தரத்திற்கு ஏற்ப சாலைகளை அமைக்கவே மத்திய அரசு 8 வழிசாலை திட்டத்தை அறிவித்தது.

மக்களின் வசதிக்காகவே 8 வழி சாலைத் திட்டம்.  வளர்ச்சி, மேம்பாடு, சாலை விபத்துகளை தடுக்கவே 8 வழி சாலை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. யாருடைய நிலத்தைப் பறித்தும் அரசு திட்டத்தை நிறைவேற்றாது.  எதிர்ப்பு தெரிவிப்பவர்களை சமாதானப்படுத்தியே திட்டம் நிறைவேற்றப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், "தமிழகம் சாலை வசதிகளில் முதன்மை மாநிலமாகத் திகழும். சேலத்துக்கு அருகே 60 ஏக்கர் நிலப்பரப்பளவில் பஸ்போர்ட் அமைக்க திட்ட அறிக்கை தயாராகிப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போ நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

அவசரகதியில் திறப்பு:

இதற்கிடையில், விழாவில் கலந்து கொண்ட திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு அவசரகதியில் பாலம் திறக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x