Published : 18 Jun 2019 10:57 AM
Last Updated : 18 Jun 2019 10:57 AM

மறைமலை நகரில் பொதுமக்களிடம் நகை பறிப்பு: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி ரவுடிகள் ரகளை - பாதுகாப்பு பணிகளை அதிகரிக்க வேண்டுகோள்

மறைமலை நகர் அருகே கீழக் கரணைப் பகுதியில் பொதுமக்களி டம் செயின் பறித்தும், பெட்ரோல் குண்டு வீசியும் ரவுடிகள் ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கார் ஒன்று எரிந்ததுடன் 2 பேர் காயம் அடைந்தனர்.

மறைமலை நகர் கீழக்கரணை ஹவுசிங் போர்டு குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர் பாபு. நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் நின்றபடி போனில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் பாபுவை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 3 பவுன் செயினை பறிக்க முயன்றனர். அப்போது பாபு கூச்சலிடவே, அக் கம் பக்கத்தினர் ஒடி வருவதற்குள், அந்தக் கும்பல் செல்போனையும் செயினையும் பறித்துக் கொண்டு தப்பியது.

பின்னர் சிறிது நேரத்தில் அதே கும்பலை சேர்ந்தவர்கள் 10 பேருடன் வந்து பாபுவின் வீட்டுக்குள் நுழைந்து அவரை தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சூறையாடினர். பாபுவின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் கார் நிறுவனத்தில் வேலை பார்க் கும் நம்பிராஜன், வடிவேல் வீட்டுக் குள் நுழைந்த அந்தக் கும்பல் அவர்களையும் தாக்கிவிட்டு, அவர்களிடம் இருந்து செல்போன், 5 பவுன் நகை, லேப்டாப் ஆகியவற்றை பறித்துக் கொண்டதுடன் வீட்டின் வெளியே இருந்த ஒரு காரின் மீது பெட்ரோல் குண்டையும் வீசினர்.

மேலும் 2 கார்களை அடித்து நொறுக்கினர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தபோது அவர்களை கல்லை கொண்டு அந்த ரவுடி கும்பல் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த பாபு, சுமன் ஆகியோர் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மறைமலை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரவுடி கும்பலை தேடிவருகின்றனர். இதே பகுதியில்தான் 2 நாட்களுக்கு முன்பு உணவகத்தின் மீது நாட்டு குண்டு வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பகுதியில் அதிகரித்து வரும் ரவுடிகளின் தொல்லைக ளால் பொதுமக்கள் பீதி அடைந் துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து ரவுடிகளால் அசம்பாவித சம்பவங் கள் நடந்து வரும் சூழ்நிலையிலும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை என இப்பகுதி மக்கள் போலீஸார் மீது குற்றம்சாட்டுவதுடன், உடனடியாக போலீஸார் மறைமலை நகர் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையையும் வைக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x