Published : 04 Jun 2019 12:47 PM
Last Updated : 04 Jun 2019 12:47 PM

மருத்துவக் கல்லூரிகளின் கட்டண விவரம்: அதிக கட்டணம் வசூலித்தால் எங்கு புகார் அளிப்பது?

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணமே நடப்பாண்டும் வசூலிக்கப்படும் என, கட்டண நிர்ணயக் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து, கட்டண நிர்ணயக் குழுவின் கூட்டம் முன்னாள் நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பங்கேற்றார்.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான நிர்வாக இட ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்படும் என கூட்டத்தில் முடிவானது.

இதன்படி, தமிழகத்தில் உள்ள 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டின்படி, குறைந்தபட்ச கட்டணமாக ஒரு லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, நிர்வாக இட ஒதுக்கீட்டின் கீழ், அதிகபட்சமாக 12 லட்சத்து 50,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கலாம் என, கட்டண நிர்ணயக் குழு தெரிவித்துள்ளது.

இதேபோல, 16 பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சத்து 50,000 ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ், அதிகபட்சம் 6 லட்சம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் புகார் அளிக்கலாம் என, மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x