Last Updated : 21 Jun, 2019 07:08 PM

 

Published : 21 Jun 2019 07:08 PM
Last Updated : 21 Jun 2019 07:08 PM

அஜித், சிம்புவைத் தொடர்ந்து தனுஷுக்கும் புதுச்சேரி நடுக்கடலில் பேனர் வைப்பு

புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது நடுக்கடலில் பேனர் வைக்க ரசிகர்கள் போட்டியிடும் சூழல் புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. அஜித், சிம்புவைத் தொடர்ந்து தனுஷின் ரசிகர்களும் தற்போது பேனர் வைத்துள்ளனர்.

புதுவை மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்தது புதுவை கடற்கரை.  புதுச்சேரியின் கடற்கரையில்தான் கடந்த 1861-ம் ஆண்டு கடலுக்குள் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. கடற்கரையில் இருந்து கடல் நோக்கி 192 மீட்டர் நீளத்துக்குப் பாலம் அமைந்தது. ஆறு ஆண்டு பணிகள் நடந்தது. 1866-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கடல் பாலம் திறக்கப்பட்டது.  1952-ல் வீசிய புயலில் புதுவை துறைமுகமும், கடல் பாலமும் முற்றிலும் மறைந்து போனது. தற்போது காந்தி சிலைக்குப் பின்னே சிறு கம்பிகளாக கடல் பாலத்தின் சாட்சிகளாக உள்ளன அக்கால கம்பிகள். 

இக்கம்பிகள் தற்போது பேனர் கட்டப் பயன்படுத்துகின்றனர். அபாயகரமான முறையில் படகில் சென்று பேனரைப் பலரும் கட்டுகின்றனர். இது அபாயகரமான முறை என்றாலும் அதை பலரும் செய்கின்றனர்.

நடிகர் தனுஷ் தற்போது இந்தி மற்றும் வெளிநாட்டுப் படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட படம் வெளியானது. அதன் தமிழ் பதிப்பு 'பக்கிரி' தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெளியானது. அதனைக் கொண்டாடும் வகையில் புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் கடலில் உள்ள இரும்புத் தூண்களில் அவரது படத்தின் பேனரைக் கட்டியுள்ளனர்.

படகு மூலம் சென்று அங்கே நீரில் இறங்கி படத்தின் பேனரைக் கட்டியுள்ளதாக குறிப்பிடுகின்றனர். இதேபோன்று அஜித், சிம்பு ஆகியோர் படங்கள் வெளியானபோது, அவர்களது ரசிகர்களும் பேனர்களை கடலில் வைத்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x