Published : 16 Mar 2018 08:11 AM
Last Updated : 16 Mar 2018 08:11 AM

நாகப்பட்டினத்தில் ரூ.220 கோடியில் 2 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்

இந்த பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு ரூ.1,016.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குந்துக்கல்லில் வரும் நிதியாண்டில் ரூ.70 கோடி செலவில் மீன் இறங்கு தளமும், நாகப்பட்டினத்தில் உள்ள வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் ரூ.220 கோடி செலவில் மீன்பிடி துறைமுகங்கள் கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும். 2018-19-ம் ஆண்டில் கன்னியாகுமரியில் உள்ள குரும்பனை, பொழிக்கரை, கேசவன்புத்தன்துறை, பள்ளம்துறை ஆகிய இடங்களில் மீன் இறங்கு தளங்கள் அமைப்பதற்கான பணிகள் ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.62.14 கோடி செலவில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் தடையில்லாத் தகவல் தொடர்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், பாரம்பரிய மீன்பிடி படகுகள், மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளுக்கு உயர் அதிர்வெண் தொடர்புக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் 60 கடல் மைல் தொலைவு வரை தடையற்ற தகவல் தொடர்பு பெறும் வசதி உருவாக்கப்படும். 60 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் பல நாட்கள் பயணம் செய்து மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கையாக, மானிய விலையில் உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகளை படிப்படியாக அரசு வாங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x