Published : 16 Mar 2018 08:29 AM
Last Updated : 16 Mar 2018 08:29 AM

போக்குவரத்து கழகங்களுக்கு 3,000 புதிய பேருந்துகள்

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இந்த ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படுகின்றன.

மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய கடன் தொகையில் ரூ.3,001.47 கோடி மூலதனப் பங்குத் தொகையாக இந்த ஆண்டில் மாற்றம் செய்யப்படும். இந்த நிதியாண்டில் மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்கு மொத்தமாக தேவைப்படும் ரூ.600 கோடியை பங்கு மூலதனமாக அரசு வழங்கும். 2017-18-ல் வாங்க அனுமதிக்கப்பட்ட 2,000 புதிய பேருந்துகளுடன், இந்த 3,000 பேருந்துகளையும் கொண்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள 4,593 பழைய பேருந்துகளும் புதிதாக மாற்றப்படும்.

நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைகள், பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க, வழிவகை முன்பணமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.900 கோடி நிதி வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டணச் சலுகை மானியத்துக்காக ரூ.799.25 கோடி உட்பட போக்குவரத்து துறைக்கு ரூ.2,717.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x