Published : 14 Mar 2018 09:07 AM
Last Updated : 14 Mar 2018 09:07 AM

சீர்காழி அருகே கரை ஒதுங்கிய 25 டால்பின்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கடற்கரை பகுதியில் 25-க்கும் மேற்பட்ட டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.

நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் அண்மை காலமாக டால்பின்கள், ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன.

இந்நிலையில், சீர்காழி அருகேயுள்ள தொடுவாய் மீனவ கிராமத்தில் உள்ள கடற்கரையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலான பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக் கின்றனர்.

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவது, கப்பல்கள் மோதுவது, எண்ணெய்க் கசிவு போன்ற காரணங்களால் டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இறந்து பல நாட்கள் ஆன நிலையிலேயே இவை கரை ஒதுங்குவதால், அவற்றின் உடலில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் நோய் பாதிப்பு ஏற்படலாம் என மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x