Published : 06 Mar 2018 08:22 AM
Last Updated : 06 Mar 2018 08:22 AM

பாஜக, காங். அல்லாத 3-வது அணிக்காக ஸ்டாலினுடன் தொலைபேசியில் மம்தா பானர்ஜி ஆலோசனை

பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணி அமைப்பது குறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கி ரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மக்களவைக்கு அடுத்த ஆண் டில் தேர்தல் நடக்கவுள்ளது. பாஜகவின் தொடர் வெற்றிகளை தடுக்க எதிர்க்கட்சிகள் ஓரணி யில் திரள வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

பாஜகவை வீழ்த்த காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாம் என மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவிக்க, அதற்கு தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி யும் பகுஜன் சமாஜும் கூட்டணி சேர கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ள சூழலில், தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணி அமைப் பது குறித்து தெலங்கானா மாநில முதல்வரும் தெலங்கா னா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ், மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் நேற்று முன்தினம் பேசியுள்ளார்.

இதற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள மம்தா, இதுதொடர் பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச் சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரனுடன் பேசியுள்ளார்.

அதேபோல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் நேற்று பேசிய மம்தா, 3-வது அணி அமைப்பது குறித்து ஆலோசித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக வட்டாரங்கள் கூறும்போது, ‘‘மம்தா பேசியது உண்மைதான். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக இருப்பதால் அதுகுறித்து ஸ்டா லின் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை’’ என்றனர்.

மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருடனும் மம்தா பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x