Published : 04 Sep 2014 10:17 AM
Last Updated : 04 Sep 2014 10:17 AM

என்ன வளம் இல்லை கன்னியாகுமரியில்?

மாவட்டம் தொடக்க காலத்தில் திருவிதாங்கூர் சமஸ் தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

சங்க காலத்தில் குமரி மாவட்டத் தின் பெரும் பகுதியை ‘ஆய்’ என்னும் சிற்றரசர்கள் ஆண்டு வந்த னர். அப்போது தோவாளை, அகஸ் தீஸ்வரம் தாலுகாக்கள் நாஞ்சில் நாடு என்றும், கல்குளம், விளவங் கோடு தாலுகாக்கள் இடைநாடு என்றும் வழக்கில் இருந்தன.

நெற்களஞ்சியம்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெற் களஞ்சியமே நாஞ்சில் நாடு தான். ஆனால் இன்று உள்ளூர் நெல் தேவைக்கே அண்டை மாவட்டங்களிடம் கையேந்திக் கொண்டிருக்கிறது. அப்போது நாஞ்சில் நாட்டில் 60 நாளில் விளைச்சல் தரும் `அறுபதாம் குறுவை’ தொடங்கி, ஏராளமான பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரி டப்பட்டன.

இப்போது உயர் விளைச்சல் ரகங்கள், பாரம்பரிய உள்ளூர் ரகங்களை ஒழித்துக் கட்டிவிட்டன. 50 ஆயிரம் ஹெக்டே ராக இருந்த நெல் சாகுபடி பரப்பு, இப்போது 10 ஆயிரம் ஹெக் டேராக சுருங்கிப் போய் விட்டது.

சோதனையில் ரப்பர்

மாவட்டத்தின் மேற்கு பகுதிக ளில் ரப்பர் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. ஆயிரக்கணக் கான குடும்பங்களை ரப்பர் தாங்கி பிடிக்கிறது. இந்தியாவிலேயே இயற்கை ரப்பர் குமரி மாவட்டத் தில் தான் விளைகிறது. இந்தியா முழுவதுக்கும் ரப்பர் நாற்று இங்கிருந்து தான் செல்கிறது. சமீப காலமாக ரப்பரின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது குமரி ரப்பர் விவசாயிகளின் சோதனை.

தொழில்துறை

குமரி மாவட்ட பெண்களுக்கு வேலை கொடுக்கும் களம் முந்திரி ஆலைகள்தான். மேற்கு மாவட்டம் முழுவதும் நிரம்பியுள்ள முந்திரி ஆலைகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை செய்கிறார்கள்.

நாகர்கோவிலை அடுத்து மாவட்டத்தின் பெரிய நகரம் மார்த் தாண்டம். இங்கு உள்ளவர்களின் முக்கியத் தொழில் தேனீ வளர்ப்பு. 30 ஆயிரம் குடும்பங்கள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேனீ ஆராய்ச்சி மையம் தேவை என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை. தமிழகத்திலேயே மிகப் பெரிய மலர் சந்தை தோவாளையில் உள்ளது. இங்குள்ள பெண்களும் வீட்டுக்கு, வீடு பூ கட்டும் தொழில் செய்கிறார்கள். ஆரல்வாய் மொழி கிராமத்தில்தான் தமிழகத்தி லேயே காற்றாலைகள் அதிகம். இக்கிராமத் தில் மட்டும் 1,525 காற்றாலைகள் உள்ளன.

மீன் பிடித்தல்

குமரி மாவட்டத்தின் தவிர்க்க முடியாத மற்றொரு அடையாளம் மீன்வளம். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி காலனி வரையுள்ள 72 கிலோ மீட்டரில் 48 கடற்கரை கிராமங் கள் இருக்கின்றன. இதுபோக மீனவர்கள் 68 கிராமங் களில் இருக்கிறார்கள்.

ஷூட்டிங் ஸ்பாட்

பாரதிராஜாவின் `அலைகள் ஓய்வதில்லை’ தொடங்கி, தனுஷின் `மரியான்’ வரை கடலோரக்கதை என்றால் சூட்டிங் ஸ்பாட் கன்னியா குமரி மாவட்டம் தான். விவே கானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம், சிதறால் மலைக் கோயில் என தமிழகத்திலேயே சுற்றுலாத் தலங்கள் நிறைந்த மாவட் டமும் கன்னியா குமரிதான். படித்த வர்கள் நிறைந்த மாவட்டம், வாழை விளையும் பிரதேசம், தமிழகத் திலேயே தேசிய கட்சிகள் வலு வாக இருக்கும் மாவட்டம் என இதன் தனித்துவங்கள் ஏராளம்.

குமரியின் மண், மக்கள் வளத்தை முற்றிலும் உணர்ந்துள்ள `தி இந்து’ நாளிதழ் இன்று முதல் குமரி செய்தி ஏந்தி தனிப் பக்கத்தில் வருகிறது. இணைந்திருப்போம் மாவட்டத் தின் வளர்ச்சி நோக்கி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x