Last Updated : 13 May, 2019 12:00 AM

 

Published : 13 May 2019 12:00 AM
Last Updated : 13 May 2019 12:00 AM

தனி பயிற்சியாளர்கள் இல்லாததால் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தவிப்பு: பள்ளி அளவிலும் பயிற்சி அளிக்க கோரிக்கை

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கென தனியாக பயிற்சி யாளர்கள் இல்லாததால் அவர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 1,500-க் கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளனர். தடகளம், நீச்சல், வீல் சேர் டென் னிஸ், வீல் சேர் கால்பந்து உள் ளிட்ட 13 வகையான போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். மாவட் டத்துக்கு ஒன்று வீதம் தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டு மைதானங்கள் தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுபாட்டில் உள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ஒரு மைதானத்துக்கு ஒரு பயிற்சி யாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாதாரண விளையாட்டு வீரர் கள், மாற்றுத்திறனாளி விளை யாட்டு வீரர்களுக்கு பயிற்சியாளர் கள் பயிற்சி அளித்து வருகின்றனர். பணிச் சுமையின் காரணமாக மாற் றுத்திறனாளி விளையாட்டு வீரர் களுக்கு கவனம் செலுத்தி பயிற்சி யாளர்கள் பயிற்சி வழங்குவ தில்லை என்று கூறப்படுகிறது.

மதுரையில் மட்டும் மாற்றுத்திற னாளிகளுக்கு தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், தமிழகம் முழுவதும் அனைத்து மைதானங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பயிற்சியாளரை நியமிக்க வேண் டும் என்று மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக, மாற்றுத்திற னாளி வீரர்களுக்கான பயிற்சியாளர் கள் சிலர் கூறியதாவது: ஒரு மைதானத்துக்கு ஒரு பயிற்சியா ளர் மட்டும் இருப்பதால் மாற் றுத்திறனாளி வீரர்களுக்கு கவனம் செலுத்தி பயிற்சி அளிப்பதில்லை. இது ஒருபுறமிருக்க, குண்டு எரிதலை எடுத்துக் கொண்டால் 7 வகையான பாதிப்பின் அடிப் படையில் பிரித்து போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சாதாரண விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கு இவை குறித்து தெரியாது. எனவே, உடற் கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்கள், தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர்களுக்கு மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் குறித்த அணுகுமுறைகளை கற்று கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு, செய்வதன் மூலம் உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கு முறையாக பயிற்சி அளிப்பார்கள். அப்போது, மாநில, தேசிய அளவிலான போட்டிகளை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ள சுலபமாக இருக்கும்.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை கையாளத் தெரிந்த நிபுணர்கள் மூலம் உடற் கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதற்காக, நிபு ணர்கள் பலர் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் அதிகாரி ஒருவர் கூறிய தாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் ஒவ் வொரு மைதானத்துக்கும் ஒரு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள் ளார். அவர், சாதாரண வீரர் களுக்கும், மாற்றுத்திறனாளி வீரர் களுக்கும் சேர்த்து பயிற்சி அளிக்கிறார். இதனால், எந்தப் பிரச்சினையும் இல்லை. பயிற்சிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x