Published : 22 May 2019 10:28 AM
Last Updated : 22 May 2019 10:28 AM

தமிழகத்தில் முந்தும் திமுக கூட்டணி; வாக்கு சதவீதம் எவ்வளவு: ‘தி இந்து’ கருத்துக் கணிப்பு

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிகமான வாக்குகளை பெறும் என ‘தி இந்து’ மற்றும் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 -ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடை பெறுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த 19-ம் தேதி வெளியாகின.

இதில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

இந்தநிலையில் ‘தி இந்து’ மற்றும் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

நாடுதழுவிய அளவில் பிரதமர் மோடிக்கு  44% அளவில் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 24% ஆதரவு மட்டுமே உள்ளது.

இந்தி மொழி பேசும் மாநிலங்களில் பிரதமர் மோடிக்கு தேசிய சராசரியை விடவும் கூடுதலாக உள்ளது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தமிழக தேர்தல் களம்

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெருமளவு மக்கள் கட்சி மற்றும் வேட்பாளர்களை முன்னிறுத்தி வாக்களித்துள்ளனர். அதேசமயம் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மக்கள் பிரதமரை முன்னிறுத்தி அதிகஅளவு வாக்களித்துள்ளனர்.

நாடுதழுவிய அளவில் பாஜக கூட்டணிக்கு 42 சதவீதமும், காங்கிரஸ் கூட்டணிக்கு 30 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. ஆனால்

தமிழகத்தில் நிலைமை முற்றிலுமாக மாற்றமாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையிலும் அதிமுக கூட்டணிக்கு மிக குறைவான வாக்குகளும், அதேசமயம் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய அளவில் வாக்குகளும் கிடைக்கும் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு வாக்கு?

கூட்டணிவாக்கு சதவீதம்
திமுக கூட்டணி47% வாக்குகள்
அதிமுக கூட்டணி35% வாக்குகள்
அமமுக9% வாக்குகள்

                                                                       

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x