Published : 11 May 2019 07:20 AM
Last Updated : 11 May 2019 07:20 AM

சொத்துகளை அபகரித்த நிலையில் மகனை காணவில்லை: முன்னாள் அமைச்சர் மீது மூதாட்டி குற்றச்சாட்டு

கரூர் அருகேயுள்ள பெரியகுளத்து பாளையத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி தெய்வானை(62). இத்தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து கோகுல் என பெயரிட்டு வளர்த்த னர். ராமலிங்கம் 16 ஆண்டு களுக்கு முன் இறந்துவிட்டார்.

இவர்களுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள நிலத்தை கடந்த 2011-ம் ஆண்டு போக்கு வரத்து அமைச்சராக இருந்த வி.செந்தில் பாலாஜி, கோகுலை கடத்தி, மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாக, செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் கரூரில் நேற்று தெய்வானை கூறியதாவது:

சொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டது தொடர்பான வழக்கில் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது அடியாட்கள் எங்களை மிரட்டிவந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் என் மகனை காணவில்லை.

இதுகுறித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த மே 6-ம் தேதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளேன். என் மகன் காணாமல் போனதற்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி காரண மாக இருக்கலாம்.

எனவே, என் மகனைக் கண்டு பிடித்துத் தருவதுடன், சொத்து களை மீட்டுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x