Published : 07 Apr 2019 11:18 AM
Last Updated : 07 Apr 2019 11:18 AM

8 வருஷமா என்ன செய்தீங்க..!- முன்னாள் எம்எல்ஏவிடம் தட்டாஞ்சாவடி மக்கள் கேள்வி

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந் தவர் அசோக் ஆனந்த். வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் தண்டனை பெற்றதால் தகுதியிழப்பு செய்யப்பட்டார்.

அதனால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலு டன் இணைந்து ஏப்ரல் 18 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸும், திமுகவும் நேரடியாக களத்தில் உள்ளன. நேற்று காலை என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியனுக்கு ஆதரவாக அத்தொகுதியில் தகுதியிழப்பு செய்யப்பட்ட எம்எல்ஏ அசோக் ஆனந்த் உடன் சென்று வாக்கு சேகரித்தார். உடன் வந்த கட்சித் தொண்டர்கள் மேளதாளம் முழங்க வேட்பாளருக்கு வரவேற்பு கொடுத்து நடனமாடி உற்சாகப் படுத்தினர்.

வாக்கு சேகரிக்க சென்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்தை, பொதுமக்கள் சாலை வசதி செய்து தராதது ஏன்?, பாதாள சாக்கடை திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை என பல கேள்விகளை எழுப்பினர். அவரும் பதில் அளித்தார்.

ஆனாலும், வீடுகளின் முன்பு தேங்கியிருந்த கழிவு நீரை சுட்டிகாட்டி பேசினர். கடந்த 8 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப் பினர் அசோக் ஆனந்த் இந்தப் பகுதிக்கு வரவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

அடிப்படை வசதிகளுக்கான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அவை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அசோக் ஆனந்த் உறுதி அளித்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.பாதாள சாக்கடை திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை கடந்த 8 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் இந்தப் பகுதிக்கு வரவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x