Last Updated : 18 Apr, 2019 10:08 AM

 

Published : 18 Apr 2019 10:08 AM
Last Updated : 18 Apr 2019 10:08 AM

மோடியை பதவியில் இருந்து இறக்க மக்கள் தயாராகிவிட்டனர்: வாக்களித்த பின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சமாதி கட்டுவார்கள் என வாக்களித்துவிட்டு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று (ஏப்.18) நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்கள் ராகுலை விரும்புகிறார்கள்..

முதல்வர் நாராயணசாமி புஸ்சி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு அலுவலகத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நாடு சின்னாபின்னமாகி விட்டது. மோடி தலைமையிலான அரசுக்கு சமாதி கட்டுகிற தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கும்.

நாட்டை சின்னப்பின்னமாக்கிய மோடியை பதவியில் இருந்து இறக்க மக்கள் தயாராகிவிட்டனர். ராகுல் பிரதமரானால்தான் விடிவு காலம் பிறக்கும்  என மக்கள் நினைக்கின்றனர். இது வாக்களிக்கும் மக்களில் முகங்களில் தெளிவாகத் தெரிகிறது.

அதேபோன்று மாநிலத்தில்  இலவச அரிசி உள்ளிட்ட திட்டத்துக்கு தடையாக இருக்கும் கிரண்பேடிக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும் என்.  ஆர் காங்கிரசுக்கும் முடிவு கட்டுவார்கள்" என்றார்.

சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி  வரிசையில் நின்று வாக்களித்தார்

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x