Last Updated : 01 Apr, 2019 02:30 PM

 

Published : 01 Apr 2019 02:30 PM
Last Updated : 01 Apr 2019 02:30 PM

வருமான வரி சோதனை செய்தவர்களும், செய்யப்பட்டவர்களும் உத்தமர்கள் அல்ல: கமல்ஹாசன் விமர்சனம்

வருமான வரி சோதனை செய்தவர்களும், செய்யப்பட்டவர்களும் உத்தமர்கள் அல்ல என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதுச்சேரி மக்களவை வேட்பாளரை அறிமுகம் செய்து தனித் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு நேற்று மாலை பேசினார்.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) புதுச்சேரி கந்தப்பா வீதியில் உள்ள மாநில மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தார்.

அதையடுத்து துரைமுருகன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த கமல்ஹாசன், "வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை அவர்கள் (துரைமுருகன்)  மிரட்டுவதாகச் சொல்கின்றனர். வருமான வரி சோதனை என்பது தப்பு செய்தவர்களுக்கு திகிலூட்டக்கூடிய விஷயம் தான். நான் அப்படித்தான் பார்க்கிறேன். வருமான வரி சோதனை செய்தவர்களும், செய்யப்பட்டவர்களும் உத்தமர்கள் அல்ல" என்றார்.

நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ள டோக்கன்கள் தரப்பட்டிருந்தன. ஆனால், டோக்கனை விட கூடுதலானவர்கள் வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. அலுவலகத்துக்கு ஒரே வழி என்பதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து பாதியிலேயே கமல் அங்கிருந்து வெளியேறினார்.

ஒரே டம்ளரில் 5 சுவை: ‘லேயர் டீ’யில் அசத்தும் மாணிக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x