Last Updated : 29 Apr, 2019 12:00 AM

 

Published : 29 Apr 2019 12:00 AM
Last Updated : 29 Apr 2019 12:00 AM

தஞ்சாவூர்- விக்கிரவாண்டி இடையே எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகள் மும்முரம்: பாலத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி தாங்கும் தன்மை ஆய்வு

தஞ்சாவூர்- விக்கிரவாண்டி இடையே அமைக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் சாலையின் பணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

போக்குவரத்து அதிகம் நிறைந்த தாகவும், குறுகிய சாலையாகவும் இருந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடை யேயான சாலையை அகலப் படுத்தி, தேவையான இடங்களில் புதிய பைபாஸ் சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மத்திய அரசு இந்தச் சாலைக்கு ‘45சி' என பெய ரிட்டது. இந்த சாலை திட்டத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியபோதும், 2010-ம் ஆண்டுதான் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன.

தொடர்ந்து நிலம் கையகப் படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என பல்வேறு நடை முறைகளைத் தாண்டி கடந்த 2017-ம் ஆண்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின.

அதன்படி, தஞ்சாவூர்- விக்கிர வாண்டி இடையே 165 கிலோமீட்டர் தொலைவுக்கு மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்கீழ் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, இதற்கு எக்ஸ்பிரஸ் சாலை என பெயரிடப்பட்டது. இந்தச் சாலை அமைக்க ரூ.3,517 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தச் சாலை அமைப்பதற்கான பணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மும்முரமாக நடை பெற்று வருகின்றன. முதல் பிரிவில், விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரையிலான பணிகளை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. இதில் கெடிலம், தென்பெண்ணை உட்பட 26 ஆற்று மேம்பாலங்கள், 27 சாலை மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம் பாலங்கள், 2 கனரக வாகன நிறுத்துமிடங்கள், பண்ருட்டி, வடலூர் ஆகிய இடங்களில் பைபாஸ் சாலை ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.

2-வது பிரிவில் சேத்தியாதோப்பு முதல் தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் வரையிலான பணிகளை பட்டேல் என்ற நிறுவனம் எடுத்து செய்து வருகிறது. இதில் அணைக்கரை, திருப்பனந்தாள் ஆகிய பகுதிகளில் 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய பைபாஸ் சாலை, 34 ஆற்றுப் பாலங்கள், ஜெயங்கொண்டம், கூட்டு ரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி உள்ளிட்ட 23 இடங்களில் மேம்பாலங்கள், ஒரு சுங்கச்சாவடி ஆகியவை அமைக்கப்படுகின்றன.

3-வது பிரிவில் சோழபுரம் முதல் தஞ்சாவூர் வரையிலான பணிகளையும் பட்டேல் நிறுவனமே செய்து வருகிறது. இதில் காவிரி, வெண்ணாறு, வடவாறு உள்ளிட்ட 62 இடங்களில் ஆற்றுப் பாலங்கள், தாராசுரத்தில் ரயில்வே மேம்பாலம், வளையப்பேட்டை, ராஜகிரி, திருக்கருக்காவூர் உள்ளிட்ட 20 இடங்களில் சாலை மேம்பாலங்கள், கும்பகோணம்- தஞ்சாவூர் இடையே புதிய பைபாஸ் சாலை ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சோழபுரத்தில் இந்தச் சாலையின் குறுக்கே செல்லும் பாலங்களின் தாங்கும் தன்மைகள் குறித்து ஆங்காங்கே மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சாலையில் 20 டன் எடை கொண்ட வாகனங்கள் செல்லும் வகையில், அதன் ஸ்திரத்தன்மை பரிசோதிக்கப்பட்டு, அதற்கு ஏற்றாற்போல பணிகள் நடைபெற்று வருகின்றன. 180 அடி அகலத்தில் மண் நிரப்பப்பட்டு, 150 அடி அகலத்துக்கு ஒவ்வொரு அடுக்காக மண், ஜல்லி, கலவை கொண்டு நிரப்பப்பட்டு, இந்தச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாலைப் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர் ஒருவர் கூறியதாவது:

மூன்று பிரிவுகளாக நடைபெற்று வரும் இந்தப் பணிகளை 2021-ம் ஆண்டுக்குள் முடிக்கும் வகை யில், நூற்றுக்கணக்கான பணியாளர் களுடன், நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புதிதாக அமைக்கப்பட உள்ள சாலையின் குறுக்கே செல்லும் வாய்க்கால், ஆறு ஆகியவற்றின் பாலங்களில் எவ்வளவு எடை தாங்கும் என்பதை மண் மூட்டைகளை அடுக்கி சோதனை செய்து வருகிறோம். இந்த மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு, நவீன கருவிகளைக் கொண்டு 24 மணி நேரம் ஆய்வு செய்யப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x