Published : 03 Apr 2019 12:32 PM
Last Updated : 03 Apr 2019 12:32 PM

கொளுத்தும் வெயிலில் வீதிவீதியாக பிரச்சாரம்: கண்டுகொள்ளாத மக்கள்.. தவிப்பில் வேட்பாளர்கள்

பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் வட சென்னை மக்களவைத் தொகுதி யில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் தவித்து வருகின் றனர்.

வட சென்னை மக்களவைத் தொகுதியில் கலாநிதி வீராசாமி (திமுக), அழகாபுரம் ஆர்.மோகன் ராஜ் (தேமுதிக), பி.சந்தானகிருஷ் ணன் (அமமுக), ஏ.ஜி.மவுரியா (மக்கள் நீதி மய்யம்), பி.காளியம் மாள் (நாம் தமிழர் கட்சி), எஸ்.ராபர்ட் ஞானசேகர் (பகுஜன் சமாஜ் கட்சி) உள்ளிட்ட 23 பேர் களத்தில் உள்ளனர். இந்த மக்கள வைத் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. ஆர்.எஸ்.ராஜேஷ் (அதிமுக), ஆர்.டி.சேகர் (திமுக), பி.வெற்றி வேல் (அமமுக), யு.பிரியதர் ஷினி (மக்கள் நீதி மய்யம்), மெர்லின் சுகந்தினி (நாம் தமிழர்) உள்ளிட்ட 40 பேர் களத்தில் உள்ள னர்.

திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மட்டுமே கடந்த 2 வாரங்களாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மற்றவர்கள் நேற்று தான் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள னர். சுயேச்சை வேட்பாளர்கள் யாரையும் தொகுதிக்குள் பார்க்க முடியவில்லை. திமுக வேட்பாளர் கலாநிதி காலை 7 முதல் 11 மணி வரையும், மாலையில் 5 முதல் 10 மணி வரையும் பிரச்சாரம் செய்கிறார். இவர், ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வ.உ.சி. நகர் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார்.

காலையிலேயே சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கானோர் பின்தொடர திறந்த ஜீப்பில் கலாநிதி பிரச்சாரம் செய்தார். குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் புதிதாகக் கட்டப்படும், மாதம் ரூ. 6 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும், கல்விக் கடன் ரத்து, இலவச ரயில் பாஸ் ஆகிய வாக்குறுதிகளை அளித்து அவர் பிரசாரம் செய்தார்.

தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் நேற்று காலை கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், வணிகர் சங்கங்கள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். மாலையில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அமமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஏ.ஜி.மவுரியா ஆகியோர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

வெயில் கொளுத்துவதால் வேட் பாளர்களின் பிரச்சாரத்தை பொது மக்கள் யாரும் கண்டுகொள்வதே இல்லை. தெருக்களில் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை பார்த்தும் பார்க்காததுபோல மக்கள் தங்கள் வேலைகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். வட சென்னையின் பல இடங்களில் இந்தக் காட்சியை காண முடிகிறது.

இதுகுறித்து வேட்பாளர்களிடம் பேசியபோது, ‘‘மக்களை தொந்தரவு செய்யாமல் அவர்களின் ஆத ரவைப் பெற முயற்சித்து வரு கிறோம். இனிமேல்தான் பிரசாரம் சூடுபிடிக்கும்’’ என்றனர்.

வேட்பாளர்களுடன் பிரச்சாரத் தில் வருபவர்களை கவனித்தால் அவர்களில் பலரை திமுக, தேமுதிக ஆகிய 2 கட்சிகளின் வேட்பாளர் களுடனும் பார்க்க முடி கிறது. கடும் வெயில், மக்களின் பாராமுகம் இவற்றால் வட சென்னை தொகுதி வேட்பாளர்கள் தவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x