தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளில் மாயமான 15,959 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்

தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளில் மாயமான 15,959 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்
Updated on: 
1 min read

சென்னை: கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்​பவர் காணா​மல் போன தனது கணவர் சங்​கர் ராஜை கண்​டு​பி​டித்து ஒப்​படைக்​கக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த நீதிப​தி​கள் ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா, பி.கார்த்​தி​கேயன் ஆகியோர் அடங்​கிய அமர்வு, சங்​கர் ராஜை கண்​டு​பி​டிக்க எடுக்​கப்​பட்ட நட​வடிக்கை குறித்து திருக்​கோவிலூர் டிஎஸ்பி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்.

தமிழகம் முழு​வதும் கடந்த 10 ஆண்​டுகளில் எத்​தனை பேர் காணா​மல் போய் உள்​ளனர். நவீன ஏஐ தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்தி அவர்​களைக் கண்​டு​பி​டிக்க எடுக்​கப்​பட்ட நட​வடிக்கை என்ன, வழக்​கு​களின் புலன் விசா​ரணை நிலை என்ன என்​பது குறித்து தமிழக டிஜிபி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என்று உத்​தர​விட்​டிருந்​தனர். இந்த வழக்கு இதே அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது தமிழக டிஜிபி சார்​பில் உதவி ஐஜி பிரதீப் தாக்​கல் செய்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த அக்.30 முதல் நவ.13 வரை தமிழகம் முழு​வதும் மாய​மானவர்​களில் 624 ஆண்​கள், 1,469 பெண்​கள், 128 சிறு​வர்​கள், 289 சிறுமிகள் என மொத்​தம் 2,510 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

கடந்த 2016 முதல் தற்​போது வரை 10 ஆண்​டுகளில் தமிழகத்​தில் 3 லட்​சத்து 4,534 பேர் மாயமாகி உள்​ள​னர். இது​தொடர்​பாக 2 லட்​சத்து 79,865 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டு, 2 லட்​சத்து 88,575 பேர் கண்​டு​பி​டிக்​கப்​பட்டு, ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதில் 15,959 பேரை கண்​டு​பி​டிக்க முடிய​வில்லை. காணா​மல் போனவர்​கள், அநாதையாக இறப்​பவர்​களை அடை​யாளம் காண இணை​யதளம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளில் மாயமான 15,959 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்
நிலம் விற்பனை தொடர்பான வழக்கு விவகாரத்தில் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்

X