Published : 15 Mar 2019 07:18 AM
Last Updated : 15 Mar 2019 07:18 AM

33 ஆண்டுகளுக்கு பிறகு தயாரான புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது?- உலக நுகர்வோர் தினத்தில் மக்கள் எதிர்பார்ப்பு

பல்வேறு மாற்றங்கள் செய்து உருவாக் கப்பட்டுள்ள புதிய நுகர்வோர் பாது காப்பு சட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது என உலக நுகர்வோர் தினத்தை (மார்ச் 15) கொண்டாடும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15-ம் தேதி (இன்று) உலக நுகர்வோர் தினம் கொண் டாடப்படுகிறது. இந்த தினத்தில் நுகர்வோரின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. 1986-ம் ஆண்டு நுகர் வோர் பாதுகாப்பு சட்டத்துக்கு மாற்றாக 2015-ம் ஆண்டு புதிய சட்ட மசோதா உரு வாக்கப்பட்டது.

மத்திய நுகர்வோர் ஒழுங்கு முறை ஆணையம், நுகர்வோர் வாங்கும் பொருட்களில் ஏதேனும் சேதாரம் இருந்து பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு உற்பத்தியாளர் பொறுப்பேற்க வேண்டும், இழப்பீடு தொகை, அபராத தொகை, சிறைதண்டனை அதிகரிப்பு என்பன உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது. வீடு வாங்குவது, கட்டுவது, தொலைத் தொடர்பு சேவைகள், ஆன்லைனில் வாங்கும் பொருட் கள், டெலி ஷாப்பிங் என அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் வருகிறது.

புதிய ஆணையம்

நுகர்வோரின் பிரச்சினைகளை தீர்ப்பதற் காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்கு முறை ஆணையம் புதியதாக அமைக்கப்ப டுகிறது. வாடிக்கையாளர்களின் புகார் மீது விசாரணை நடத்தி, இழப்பீடு வழங்குவது குறித்த உத்தரவினை வழங்குவதற்கு இந்த ஆணையம் நடவடிக்கை எடுக்கும். தேவை ஏற்பட்டால், நுகர்வோர் ஆணையமே கள ஆய்வு நடத்தி, விசாரணை மேற்கொள்ளும். அதில், முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து சேதம் அல்லது பாதிப்புக்கு ஏற்றார்போல் அபராதம் வசூலிக்க முடியும்.

இழப்பீடு அதிகம்

மாவட்ட நுகர்வோர் ஆணையம் மூலம் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையிலும் (தற்போது ரூ.20 லட்சம்), மாநில நுகர்வோர் ஆணையம் மூலம் ரூ.10 கோடி வரையிலும் (தற்போது ரூ.1 கோடி வரை) இழப்பீடு பெற முடியும். தவறான விளம்பரங்கள் மூலம் நுகர்வோரை ஏமாற்றினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து ரூ.10 லட்சம் வரை யில் அபராதம் வசூலிக்க முடியும். தொடர்ந்து தவறு செய்து வந்தால் அந்த நிறுவனங் களுக்கு ரூ.50 லட்சம் வரையில் அப ராதம் விதிக்கலாம். மேலும், 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அளிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.

கலப்பட பொருட்கள் உற்பத்தி, விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் அதிகரிக்கப் பட்டுள்ளது. கலப்பட பொருட்கள் என உறுதி செய்யப்பட்டு நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றால் ரூ.1 லட்சம் வரை அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை, பாதிப்பு ஏற்பட்டால் ரூ.3 லட்சம் வரை அப ராதம் மற்றும் ஒரு ஆண்டு சிறை தண்டனை, தீவிர பாதிப்பாக இருந்தால் ரூ.5 லட்சம் வரை அபராதம், 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும். கலப்பட பொருள் மூலம் நுகர் வோர் இறந்துவிட்டால் ரூ.10 லட்சம் அப ராதமும், அதிகபட்சமாக ஆயுள்தண்டனை அளிக்கலாம் என சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிட்டிசன் கன்சியூமர் அண்ட் சிவில் ஆக்சன் குரூப் (சிஏஜி) அமைப் பின் இயக்குநர் எஸ்.சரோஜா கூறிய தாவது:

நுகர்வோரின் உரிமைகளை வெளிப்படுத் தும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய சட்டம் மக் களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த புதிய சட்ட மசோதாவில் வீடு கட்டுவது, வாங்குவது போன்ற பல்வேறு இடங்களில் மேற்கொள் ளப்படும் ஒப்பந்ததாரர்களின் ஒருதலைபட்ச மான ஒப்பந்தத்தை எதிர்க்கும் வகையிலும், நியாயமான முறையில் ஒப்பந்தம் மேற் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொருட்களை வாங்கும்போது பாதிப்பு இருந் தால் இழப்பீடு கோருவதிலும் நுகர்வோ ருக்கு சாதகமாக வழிவகை செய்யப் பட்டுள்ளது.

பொருட்களின் இழப்புகளுக்கு ஏற்றவாறு இழப்பீடு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் களை கொடுக்கும் அல்லது கொடுத்த வாக் குறுதிகளை நிறைவேற்றாத நிறுவனங் களுக்கும், விளம்பரங்களில் நடித்திருக்கும் பிரபலங்களுக்கும் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

பழைய விதிகளின் கீழ் இழப்பீடு பெறு வதற்கு அனைத்து காரணங்களையும் நிரூபித்தாக வேண்டும். ஆனால் இந்த புதிய மசோதாவில் ஏதேனும் ஒரு காரணத்தை நிரூபிக்கும் பட்சத்தில் இழப்பீடு கோர முடி யும். ஆன்லைனில் வாங்கப்படும் பொருட் களுக்கு இந்த சட்டம் பொருந்தும் என புதி தாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட் டத்தை முழுமையாக அமல்படுத்தும்போது தான் நுகர்வோர் முழுமையாக பயன்பெற முடியும். உலக நுகர்வோர் தினம் கொண்டாடும் இந்த தருணத்தில் நுகர்வோர் நலன் காக்க புதிய பாதுகாப்பு சட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x