Published : 21 Mar 2019 06:34 PM
Last Updated : 21 Mar 2019 06:34 PM

கூடா நட்பால் நிகழ்ந்த விபரீதம்: சிறுமியைக் கொன்ற தாய் கைது

உதகையில் சிறுமியை கழுத்தை நெரித்துக் கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை கோடப்மந்து அம்பேத்கர் நகர் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெகநாதன். இவரது மனைவி ராஜலட்சுமி(33). இவர்களது மகள் உஷாராணி (11) 5-ம் வகுப்பு படித்து வந்தார். ராஜலட்சுமிக்கு கூடா நட்பு இருந்ததால், கணவன் பலமுறை எச்சரித்து வந்தார்.

ஆனால், ராஜலட்சுமி தொடர்பை விடவில்லை. இதனால், கணவன் ஜெகநாதன் மனைவியைப் விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். ராஜலட்சுமி தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் உஷாராணி, நீண்ட நேரமாக தூங்கிக் கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை உதகை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர் சிறுமி இறந்து விட்டதாகக் கூறியுள்ளார்.

உதகை பி1 உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமி  வழக்கு பதிவு செய்து, தாய் ராஜலட்சுமிடம் விசாரணை மேற்கொண்டார்.  அப்போது, உஷாராணி தொட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்ததாகக் கூறியுள்ளார். பின்னர், தானே உஷாராணியை கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போலீஸார் கூறும் போது, ''நேற்று முன்தினம் தாய் கூடா நட்பில் ஒன்றாக இருந்ததை சிறுமி உஷாராணி பார்த்துள்ளார்.  அதை தனது பாட்டியிடம் கூறுவதாக சிறுமி கூறியுள்ளார். இதனால், விஷயம் வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்து ராஜலட்சுமி கொலை செய்துள்ளார்'' என்றனர்

கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், ராஜலட்சுமியைக் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x