Published : 17 Mar 2019 01:13 PM
Last Updated : 17 Mar 2019 01:13 PM

கூட்டணி அறிவிப்பதற்கு முன்பிருந்த சூழ்நிலை தற்போது தலைகீழாக மாறியிருக்கிறது: எச்.ராஜா நம்பிக்கை

அதிமுக கூட்டணி அறிவிப்பதற்கு முன்பிருந்த சூழ்நிலை தற்போது தலைகீழாக மாறியிருக்கிறது என்று பாஜகவின் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

கூட்டணி கட்சிகள் அனைத்துமே, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக அடங்கிய கூட்டணி இயல்பான கூட்டணி.  இந்தக் கூட்டணியின் பிரதான குறிக்கோள், இந்த நாட்டினுடைய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவையாகும், இதனை பிரதமர் மோடியினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதை வண்டலூர் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

 

ஆகவே நாட்டு நலன் கருதி இந்தக் கூட்டணியானது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரி மாதம் 17ம் தேதி கூட்டணி அறிவிப்பதற்கு முன்பாக தமிழகத்தில் இருந்த சூழ்நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது.

 

ஏனென்று சொன்னால் இந்தக் கூட்டணி அறிவிப்பதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தல் மூலமாகவே கூட நாங்கள் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்றெல்லாம் மனப்பால் குடித்தனர். இப்போது அது முடியாது என்பதனால்தான் இந்தக் கூட்டணி பற்றி, பாமக தலைவர் ராமதாஸ் பற்றி மோடி பற்றி, முதல்வர் பற்றி இந்த ஆட்சி பற்றி தடித்த வாக்குகளைக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்குக் காரணமே அவர்கள் சுவரில் நன்கு எழுதப்பட்டிருப்பதை நன்கு உணர்ந்திருக்கும் காரணத்தால் இப்போது நிலைதடுமாறிப் போயிருக்கிறார்கள்.

 

எங்களுக்கு இருக்கும் முக்கியப் பணி இனி மக்களை அணுகு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதாகவே இருக்கும்.

 

இவ்வாறு கூறினார் எச்.ராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x