Published : 06 Mar 2019 06:24 PM
Last Updated : 06 Mar 2019 06:24 PM

துரைமுருகனிடம் பேசவில்லை, அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை: சுதீஷ் பேட்டி

துரைமுருகனுடன் செல்போனில் ஒரே முறைதான் பேசினேன், அதிமுக அணியில் பேச்சுவார்த்தை தொடர்கிறது என சுதீஷ் பேட்டி அளித்தார்.

பியூஸ் கோயல் நேற்றிரவு மும்பையிலிருந்து என்னிடம் தொடர்புக்கொண்டு காலை சென்னை வருகிறேன், என்னை சந்திக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். இன்று காலை பணிகள் அதிகம் இருந்ததால் சந்திக்க முடியவில்லை. மதியம் சந்தித்தேன்.

சந்திப்பில் கூட்டணிகுறித்தும் தொகுதி எண்ணிக்கை குறித்தும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேசினோம். இன்று பிரதமர் வருகை தர உள்ளதால் எங்களுக்கு நேரம் குறைவாக இருந்ததால் மீண்டும் பேசலாம் என அவர் சென்றுள்ளார். அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை தொடரும்.

துரைமுருகனிடம் சீட்டு கேட்டதற்கு இடமில்லை என மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளாரே?

எங்களைப் பொருத்தவரை ஒரே முறைதான் பேசினோம். அதன்பின்னர் வேறு பேட்டி அளிக்கவில்லை. நாங்கள் ஒரே நிலைப்பாடுதான். பாஜகவுடந்தான் கூட்டணி என்கிற நிலைப்பாடு அதன் அடிப்படையில் பாஜகவுடன் பேசிக்கொண்டிருந்தோம்.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி வரவேண்டும் என பாஜக விரும்பினார்கள். அதன் பின்னர் அதிமுக கூட்டணிக்கு வருவதற்காக அதிமுக தலைமையிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பாமக கையெழுத்து போட்டுவிட்டார்கள்.

அதை நாங்கள் எங்கள் வருத்தத்தை தெரிவித்தோம், கடந்த காலங்களில் உள்ளதுபோல் எல்லோரும் ஒன்றாகத்தானே கையெழுத்து போட்டிருக்கிறோம் இப்போது ஏன் இந்த நடைமுறை என்று கேள்வி எழுப்பினோம். அந்த நேரத்தில் திமுக சார்பில் அழைப்பு வந்தது உண்மைதான். அப்போது துரைமுருகன் பேசியது உண்மைதான்.

பாமகவுக்கு 7 தொகுதிகள் கொடுத்தது வருத்தமா?

பாமகவுக்கு 7+1 கொடுத்தது அது அவர்கள் விவகாரம். எங்கள் கட்சியின் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். அந்த அடிப்படையில் தொகுதிகளை கோருகிறோம்.

பிரதமர் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துக்கொள்கிறாரா?

கூட்டணி, தொகுதி, எண்ணிக்கை முடிவாகவில்லை. ஆகவே மோடி இன்னொருமுறை வரப்போகிறார் அப்போது கலந்துக்கொள்வோம்.

திடீரென திமுகவுடன் பேசுவதற்கு என்ன காரணம்?

நான் பேசியது உண்மைதான். அது அந்த நேரத்தில் கூட்டணியில் பேசியது.

இவ்வாறு சுதீஷ் தெரிவித்தார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x