Published : 16 Mar 2019 11:19 AM
Last Updated : 16 Mar 2019 11:19 AM

தாமரை கோலம் அழிப்பு தேர்தல் நடவடிக்கை அல்ல; உரிமை மீறல்: எச்.ராஜா சாடல்

ஆண்டாள் கோவிலில் தாமரை வடிவிலான கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்ததற்கு பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பொதுமக்களால் வரையப்பட்ட கோலங்களில், தாமரை வடிவத்திலான கோலங்கள் இருந்தன. நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், தாமரை வடிவிலான கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்தனர்.

இதற்கு பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஸ்ரீவில்லிப்பத்தூர் ஆண்டாள் கோவிவில் மகாலட்சுமி வீற்றிருக்கும் தாமரை கோலம் டி.எஸ்.பி உத்தரவால் அழிக்கப்பட்டுள்ளது இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடும் வரம்பு மீறிய செயல்.

இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாரபட்சமாக செயல்படுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இவ்விவகாரத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

கை, சூரியனை என்ன செய்வீர்கள்?

தமிழிசை வெளியிட்டிருந்த அறிக்கையில், "மஹாலஷ்மி அமர்ந்திருக்கும் தாமைரையை பக்தி நோக்கத்தோடு பொதுமக்கள் வரைந்திருக்கின்றனர். தேர்தல் நோக்கத்தோடு வரையப்பட்டது அல்ல.

அப்படியென்றால் கை காண்பித்தால் தேர்தல் சின்னம் என்று கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா?

தினமும் சூரியன் உதிக்கின்றது தேர்தல் சின்னம் என்று சூரியனை மறைத்து விடுவீர்களா?" எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x