Published : 17 Feb 2019 07:40 PM
Last Updated : 17 Feb 2019 07:40 PM

செவிக்கு உணவு: தமிழ் உணவு குறித்த அமர்வு

கோவையில் இன்று (பிப்ரவரி 17) , இந்து தமிழ் திசை நடத்தும் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழ் உணவு குறித்த அமர்வு நடைபெற்றது

சமஸ் நெறியாள்கை செய்ய,  தமிழச்சி தங்கப்பாண்டியன்,  பக்தவச்சலம் பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியிலிருந்து சில பகுதிகள்:

சமஸ் : தமிழர் உணவு உணவாக பார்க்காமல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக பார்க்கவேண்டும். இந்தியா முழுதும் தனித்துவ சமுதாயமாக இருக்கும் குஜராத்தி, மஹாராஷ்ட்ரா, வங்காளமாக இருக்கட்டும். தமிழகத்திலேயே பல இடங்களில் பல நூறு கிலோ மீட்டர் சென்றாலும் நமது உணவுகள் கிடைக்கிறது. ஆனால் வங்காளத்தில் அதுபோன்று இல்லை. பல மாநிலங்கள் வங்காள உணவுக்காக அதிகம் செலவழிக்கும்போது கிடைக்கிறது. யோயோ, பீட்சா போன்றவற்றை உண்கிறார்கள். ஆனால் தமிழகத்தைப்போன்ற உணவு முறைகளில் பிரியாணி உள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழச்சி: பொதுவாக நாம் பெருமைப்படும் மிகப்பெரிய பண்பாட்டு அடையாளமாக கூறும் விஷயம் உணவுதான். ஊருக்கு ஒரு உணவு. காரைக்குடி என்றால் அங்கு ஒரு உணவு, கரிசல் காடு என்றால் அது ஒருவகை உணவு. ஆனால் எல்லாம் ஒன்றாக கிடைப்பதில்லை. அதற்கு என்ன காரணம்?இன்றைய இளைய தலைமுறை நாம் என்னதான் உடல் ஆரோக்கியம் குறித்து உணவு முறையை பழக்க முயன்றாலும் பாஸ்ட் புட் என்கிற கலாச்சாரம், வெளிநாட்டு உணவு வகைகள் அதிகமாக பார்க்கப்படுகிறது. அது நுகர்வுக் கலாச்சாரம் அதற்கு முதல்பலி இளைய சமுதாயம்தான்.

தமிழ்ச் சூழலைப் பொருத்தவரை உணவு முக்கியமான அடையாளம். உணவுகுறித்து தீவிரமாக பார்ர்கவேண்டும். உலகின் தொன்மை வாய்ந்த ஐந்து சமூகத்தில் தமிழ்ச்சமூக அழிந்துப்போகாமல் தொடர்கிறது. இந்தியாவில் தமிழகத்தில் 355 சமூக தமிழகத்தில் உள்ளது. இதில் 200 தமிழ்ச் சமூகம், மீதி உள்ள 155 சமூக மற்ற மாநிலத்தைச் சார்ந்தவர்கள்.

தமிழகத்தில் மட்டுமே 3 விதமான மேற்கத்திய மயம், போஸ்ட் மார்ட்டம் இந்த காலக்கட்டத்தில் உள்ள வணிகப்போர் ஒன்று நடக்கிறது. இதில் நுகர்வோருக்காகவும் பன்னாட்டு கலாச்சாரம், உணவு வகைகளை கொண்டுவரும் போக்கு உள்ளது. இதில் தமிழ்ச்சமூக உணவு முறை பெரிதும் உருமாறி உள்ளது எனலாம்.

சமஸ் : 50 ஆண்டுகளில் இழந்துவிட்ட அற்புதமான உணவு, மீட்ட வகைகள் எது?

தமிழச்சி: முக்குழி பணியாரத்தைச் சொல்வேன். என் அப்பா பிறந்தது சாயல்குடி, மீனவ சமுதாயத்தைச் சார்ந்த கிராமம். அப்பா தாத்தா கள் அருந்தி முக்குழி பணியாரத்தை சாப்பிடுவார்கள். மீன் உணவு, கருவாடு, காலை முக்குழி பணியாரம்.

அம்மா சிவகாசி அனுப்பங்குளம் பக்கம், அவர்கள் நெய் சார்ந்த அப்பம் ஒன்று செய்வார்கள். பருத்திப்பாலில் செய்யும் அப்பம். பருத்திக்காட்டோடு சேர்ந்த அப்பம், பருத்திப்பால் தற்போது இல்லை. கம்பச்சோறு, கேப்பங்களி, கம்பங்களியை மோர் உருண்டையில் இருக்கும், பெரும்பானைச்சோறு என்று கூறும் சோறு வடித்த கஞ்சி, மோரில் போட்டு சாப்பிடும் உணவு.

இனிப்பு வகைகள் பால் சேர்த்து செய்யும் உணவு. அன்று எங்கும் விளையாடுவோம், எந்த வீட்டிலும் சாப்பிடுவோம். தீபாவளிக்கும், பொங்கலுக்கும் மட்டுமே தோசை இருக்கும். இன்று வகை வகையான தோசை சாப்பிட்டாலும் ஓலைகொட்டானில் வைத்திருந்த அந்த தோசை சாப்பிட்ட இன்பம் எதிலும் இல்லை. ‘

பக்தவச்சலம் : உணவு என்றால் தமிழ்நாடன் எழுதியது. கல் டீ சாப்பிடுவது போல் கொடுப்பார்கள் அதை மிஸ் பண்ணி விட்டோம். நீராகாரம் சாப்பிடுவதுஅதையும் இழந்துவிட்டோம். இன்று பாலையே தவிருங்கள் என்று சொல்கிறார்கள். இதை மீண்டும் கொண்டு வருவதுதான் நமது கடமை. காஞ்சிபுரம் இட்லி அது சத்தான ஒன்று. வெங்காயம் கடலைப்பருப்பு போட்டு செய்யக்கூடியது.

அந்தந்த வட்டார உணவு வகைகளை மீட்டெடுக்கலாம். அதில் ஏராளமான வகைகள் உள்ளது. வாட்டார உணவுகளை மீட்டெடுப்பது தேவையான ஒன்று.

தமிழச்சி: நாங்கள் ஆட்டுப்பால் அதிகம் சாப்பிட்டுள்ளோம், எருமைத்தயிர் சாப்பிட்டுள்ளோம். காலை முதல் மாலை வரை வேலை செய்ய வேண்டும் என்றால் எருமைத்தயிர் மிகச்சிறந்த உணவு. அதை செரிமானம் செய்ய வேண்டும் என்றால் உழைப்பு வேண்டும்.

பேலியோ வகை நமது உணவு செரிமாணம் இது குறித்த வாதம் உள்ளது, ஒவ்வொரு உணவும்பல ஆயிரம் வருஷம் இணைந்து வருகிறது. நம்முடன் இணைந்து வரும் உணவு நமக்கு சரியாக இருக்குமா?

சங்க காலத்தில் பயிரிட்ட அத்தனை பயிர் வகைகளையும் தற்போது பயிருடுகிறார்கள். குறிஞ்சி, நெய்தல் அனைவரும் பண்டமாற்று உணவுமுறையில் பகிர்ந்து உண்டுள்ளனர். நம் உணவு பழக்கம் 5000 வருடம் தொல்லியல் முறை உண்டு.

சமஸ் : நமது உணவுப்பண்பில் 20, 30 ஆண்டுகால மாற்றம் வருகிறது. பல உணவு வகைகள் அழிந்து வருகிறது?இது எதிர்காலத்தில் எப்படி மாறும்?

பக்தவச்சலம்: தற்போதுள்ள காலக்கட்டத்தை பொருளாதார் வல்லுனர்கள் ஹைபர் அட்மின் காலகட்டம் என்கிறார்கள். தமிழகத்தை மூன்றாவது வளர்ந்துள்ள சமூகம் என்கிறார்கள். இந்த நகரமயமாக்கம் என்பது நகரத்தில் கிராமசந்தையை பார்க்கிறோம். சென்னையில் அபரிதமான வளர்ச்சி இருந்தாலும், அதிகம் நகரமயமாக்கப்பட்ட மாநிலம் என்றாலும் கிரமத்தை அங்கு பார்க்கலாம். 45 சதவிகிதம் நகரமயமாக்கப்பட்டுவிட்டது. கிராமங்களில் நகரங்களை பார்ர்கிறோம். தற்போதுள்ள நுகர்வு கலாச்சாரத்தில் லயித்துப்போக்கும் சமூக மரபியலை அறுத்துக்கொள்ளும் நிலையாக உள்ளது.

தமிழச்சி: உணவு உடல் வளத்துக்கு அல்ல, சமூகம் சார்ந்த ஒன்றுத்தான், இனக்குழு, தொன்மைச்சமூகம் அனைத்துக்குமான அடையாளமாக உள்ளது. மயானக்கொள்ளை என நடக்கும். அதில் உபரியானதை கொண்டுவந்து வைப்பார்கள். இன்றும் நாம் அதிகம் பார்ப்பது கல்யாணத்தில் பார்ப்பது பஃபே சிஸ்டம்தான். ரசித்து சாப்பிட முடியாது. யாரிடமும் பேச முடியாது. நமக்கு பிடித்த மாதிரியான அன்பை பரிமாறும் விஷயமாக ஒன்றாக உணவுப்பழக்கம் நமது சமூகத்தில் உள்ளது.

அன்பைச்சொல்லி பெண்களை மேலும் மேலும் சமையல் கட்டுக்குள் அடைக்கும் செயலை செய்கிறீர்கள் என்பார்கள். ஆனால் அதுவும் உண்டு. நெல்லையில் முழுச்சாப்பாட்டை சாப்பிட்டால் 7 மணிக்கு பால் மட்டும் குடித்து நிம்மதியாக தூங்கலாம்.

உணவு வகைகளில் நான் ஏன் மல்டி நேஷனல் கம்பெனியை ஊக்குவிக்கணும், ஏன் பீட்சாவுக்கு போகக்கூடாது, ஏன் பர்கர் சாப்பிடக்கூடாது என்பதை கூறவேண்டும். 24 மணி நேரம் ஏசியில் உள்ள குழந்தைகளிடம் கம்பங்கஞ்சியை குடி என்றால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அதை உணர்த்தவேண்டும். நம் நாட்டுச்சூழ்நிலைக்கு ஏற்ற எத்தனை உணவுகளை நம் மண் கொடுக்கிறது. இளநி, நுங்கு என பல உண்டு.

உங்கள் வாழ்க்கை என்று வரும்போது உங்கள் உடல் மரபு சார்ந்த உணவுக்கு சென்றால் அந்த உணர்வு அறுபடாமல் இருக்கும். இளைய தலைமுறைக்கு நான் சொல்வது இதுதான் ஆங்கிலம் கற்றுக்கொள்வது ஆங்கில முறைப்படி வாழ்வது தான் சிறந்தது என்று நினைக்கிறார்கள் அது தவறு.

ஒட்டுமொத்த தொகுப்பாக நாம் புரிந்துக்கொள்வது உணவு நம் கலாச்சாரத்தை, உணர்வை, மரபணுக்களை காக்கக்கூடியதாத இருக்க வேண்டும் என்றால், அந்த பாரம்பரிய சங்கிலி அறுந்துபோகாமல் இருக்க வேண்டும் என்றால், உணவு என்பது பெண்களுக்கான ஒன்றாக பார்க்கும் பார்வை மாறவேண்டும் என்பதாக எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x