Published : 24 Feb 2019 08:08 PM
Last Updated : 24 Feb 2019 08:08 PM

வரும் காலங்களில் உடல் உறுப்புகள் கடைகளில் விற்கப்படும் : கவிஞர் வைரமுத்து பேச்சு

தஞ்சாவூரில் திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்ட வைரமுத்து வரும் காலத்தில் மனித உறுப்புகள் கடைகளில் விற்கப்படும் நிலைமை தோன்றும் என்று தெரிவித்தார்.

 

இருதயம், கிட்னி போன்றவற்றுக்கு தனித்தனி கடைகள் உருவாகும். பிறந்த குழந்தைக்கு ‘சிப்’ பொருத்தப்படும், இவை நோய்களைச் சரிப்படுத்தவும் செய்யும், வெளிப்படுத்தவும் செய்யும், இவையெல்லாம் நிச்சயம் வரும் என்றார் வைரமுத்து.

 

தஞ்சாவூரில் திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி தலைமையில் சமூகநீதி மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாள் நிறைவு அரங்கத்தில் கி.வீரமணி, வைகோ, வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

 

அதில் பேசிய வைரமுத்து, சினம் நிறையக் கூடியிருக்கும் பகுத்தறிவு சிங்கங்களே, எனக்கு பயனாடைப் போர்த்தி வாழ்த்தினார் தலைவர் கி.வீரமணி. நிர்வாணமாய் கிடந்த தமிழினத்துக்கே பயனாடை கொடுத்தவர் பெரியார்.

 

மானத்தை ஆடையாக அணியச் செய்தவர் பெரியார்.  64 வயதில் இந்த மேடை ஏற எனக்கு அனுமதி அளித்த வீரமணிக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். தலைவர் வீரமணிக்கு நூற்றாண்டு விழாவை நடத்துவோம்.

 

ஒரு மொழிக்குப் பெருமை தொன்மை இல்லை தொடர்ச்சிதான். அதே போல் ஒரு இயக்கத்துக்கும் தொடர்ச்சிதான் பெருமை. பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் பட்டுப்போய் விடும் என்று கனவுகள் கண்டனர் பலர்.

 

பெரியாரின் குண்ங்கள் மணியம்மையாருக்கு இடம்பெயர்க்கப்பட்டது. அவை தற்போது வீரமணியிடம் உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் பகுத்தறிவைச் சொல்லிக் கொடுங்கள். தமிழில் பேசுங்கள், நாளை நம் அரசு அமைகிறது, என்றார் வைரமுத்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x