Published : 17 Feb 2019 06:07 PM
Last Updated : 17 Feb 2019 06:07 PM

இயக்குநர் ஸ்ரீதர் கொடுத்த செயின்: ராம்குமார் நெகிழ்ச்சி

கோவையில் நடைபெறும் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியான ‘சிம்மக்குரலோன்’ சிவாஜியைப் போற்றும் நிகழ்வில்,  நரசிம்மன் எழுதி, இந்து தமிழ் திசையில் வெளியான  ‘சி(ரி)த்ராலயா’ தொடர் புத்தகமாக வெளிடப்பட்டது. அதை நடிகர் சிவகுமார் வெளியிட, சிவாஜி கணேசனின் புதல்வர் ராம்குமார் அதைப் பெற்றுக் கொண்டார்.
 

சிம்மக்குரலோன் நிகழ்ச்சியில் சிவாஜியின் புதல்வர் ராம்குமாரை இந்து தமிழ் சர்க்குலேஷன் தலைவர் சங்கர் கவுரவித்து சால்வையணிவித்தார். இதேபோன்று ஐஏபி நிறுவனர் ஜெயக்குமாரை ராம்குமார் கவுரவித்தார்.

கூட்டத்தில் ராம்குமார் பேசியதாவது. சிவகுமார் அண்ணன் தமிழ் பேசிய பின்னர், நடிகர் திலகம் குறித்த காணொலி போட்டு என்னை எமோஷன் ஆக்கிய பின்னர் நான் என்ன பேசுவது என தவித்து நிற்கிறேன். இந்த மகத்தான சேவை செய்துவரும் இந்து தமிழ் திசைக்கும், ஆசிரியர் அசோகனுக்கும் உங்கள் அனைவரும் நானும், சிவாஜி சாரின் ரசிகர்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

சிவகுமார் சொன்னது போல்  வேட்டைக்காரன் புதூர், பொள்ளாச்சி, கோவையை சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர். கோவை என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஊர். அவருக்கு பிடித்த கோவையில் விழா எடுத்தது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒன்று.

சிவகுமார் சொன்னதுபோல் எங்களையும் பெரிய பள்ளியில் சேர்த்து ஊரெங்கும் அப்பா படிக்க அனுப்பினார். எனக்கு ஆரம்பத்தில் தமிழ் வராது டமில் என்போம். இப்ப தமிழ் கற்றுக்கொண்டோம். கோபு அண்ணினின் மகனை (சிரித்ராலயா தொடரின் ஆசிரியர் நரசிம்மன்) எனக்கு நன்றாகத் தெரியும். கோபு அண்ணனின் முதல்படம் கல்யாணப்பரிசு. உங்களுக்கெல்லாம் தெரியாது, அந்தப்படத்தில் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்தது நான்தான். அதற்காக எனக்கு ஸ்ரீதர் சார் செயின் அணிவித்தார். அதை அம்மா பத்திரமாக வைத்துள்ளார். இன்றும் அவர் மறைவுக்கு பின்னும் அந்த செயின் என்னிடம் உள்ளது.

இந்து தமிழ் திசையை நான் மறக்க மாட்டேன், நீங்கள் செய்வது பெரிய சேவை. எங்களைப்போன்ற தமிழ் தெரியாத ஆட்களுக்கு நீங்கள் தமிழ் கற்றுக்கொடுக்கிறீர்கள். இந்த சேவை தொடரவேண்டும். மீண்டும் ஒருமுறை இந்து தமிழ் திசைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x