Published : 14 Feb 2019 01:35 PM
Last Updated : 14 Feb 2019 01:35 PM

ராகுலை பிரதமராக அமர வைக்க நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்வோம்: தமிழக காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

ராகுல்காந்தியை பிரதமராக அமர வைக்க நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்வோம் என, தமிழக காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:

தீர்மானம் 1:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி, செயல் தலைவர்களாக வசந்தகுமார், கே. ஜெயக்குமார், எம்.கே. விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட புதிதாக பொறுப்பேற்றவர்களுக்கு வாழ்த்து தீர்மானம் 

தீர்மானம் : 2

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக அமர வைக்க நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்வோம் என்று சூளுரை

தீர்மானம் : 3 

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு வாழ்த்து

தீர்மானம் : 4

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் விளை பொருளுக்கு உரிய விலை வழங்குவதற்கு உத்தரவாதம் செய்ய வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வட்டியுடன் வழங்க வேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பாக கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும்.

தீர்மானம் : 5 

சிவகாசியில் பாதிக்கப்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்தில் உள்ள நியாயத்தை மத்திய - மாநில அரசுகள் பரிவுடன் கவனித்து உரிய தீர்வு காண வேண்டும்.

தீர்மானம் : 6 

வறட்சி பாதிப்புகளுக்கான நிவாரண நிதி உள்ளிட்டவற்றை மத்திய பாஜக அரசு மதிக்காமல் அலட்சியப்படுத்துகிறது. இதனால் தமிழகத்தின் நலன்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை தமிழக காங்கிரஸ் தீவிரமாக மேற்கொள்ளும்.

தீர்மானம் : 7 

சிமெண்ட், மணல், செங்கல் ஆகிய கட்டுமான பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கு உரிய அமைப்பை உருவாக்க வேண்டும்.

தீர்மானம் : 8 

 நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைக்கிற முயற்சிக்கு கிராமப்புற மக்களிடையே எதிர்ப்பு இருக்கிற காரணத்தினால் விரிவாக்க முயற்சிகளை கைவிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x