Published : 15 Feb 2019 09:19 AM
Last Updated : 15 Feb 2019 09:19 AM

பிரதமர் மோடியின் சீர்திருத்த நடவடிக்கையால் உலக பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரி விழாவில் அமைச்சர் ஸ்மிருதி இ‌ரானி பெருமிதம்

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் 'மகளிர் தொழில் முனைவோர் மேம்படுத் துதல்' என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது. கருத்த ரங்கிற்கு கல்லூரியின் தலைவர் சாமிக்கண்ணு தலைமையேற்றார். ஜவுளி விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மத்திய ‌ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இ‌ரானி பேசியது:

பெண்கள் அடுப்படியில் முடங்கி கிடப்பதை மாற்ற வேண்டும் என்றால், அவர்கள் படித்தால் மட்டும் தான் அது முடியும்.

கடந்த 55 ஆண்டுகளாக பெண்களுக்கான தனியாக கழி்ப்பறை இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக இல்லை. ஏன் பெரிய நகரங்களில் கூட கழிப்பறை வசதி இல்லாமல் இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் 4.25 லட்சம் கழிப்பறைகள் பள்ளிகளுக்கும், தனியார் குடும்பத்தினருக்கும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அளித்த வாக்குறுதியை நம்பி 1 கோடி வசதி படைத்த குடும்பத்தினர் தங்களுக்கு எரிவாயு இணைப்பு மானியம் தேவை இல்லை என திருப்பி அளித்துள்ளனர். பிரதமர் எடுத்த சீர்திருத்த நடவடிக்கை மூலம் நம் நாடு பொருளாதாரத்தில் 6வது நாடாக உலக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த 55 ஆண்டுகளில் இல்லாது அளவிற்கு 34 கோடி எழை மக்கள் வங்கி கணக்கைத் தொடங்கி உள்ளனர். அந்த வங்கி கணக்கின் மூலம் அவர்களுக்கான அனைத்து மானியங்களும் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது பெண்கள் முன்னேற வேண்டிய நேரம் வந்து விட்டது. ”ஆயுஸ்மான் பாரத்” என்ற மருத்துவ காப்பீட்டின் மூலம் ரூ 5 லட்சம் வரை இலவச மருத்துவ வசதி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்கள் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் தங்களது நகை, வீடு, நிலம் ஆகிய வற்றை அடமானம் வைத்து தனியாரிடம் கடன் பெற்று வந்தனர். ஏழை மீண்டும் ஏழையாக ஆனார்கள். தற்போது மோடி அறிவித்த ”முத்ரா யோஜனா” திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் எளிதாக வங்கிக் கடன் பெற்று தொழில் தொடங்கி உள்ளனர். இந்தியாவில் 15 கோடி நபர்கள் இதில் கடன் பெற்று உள்ளனர், இதில் 73 சதவீம் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது. விவேகானந்தர் சொன்னது போல், 'பெண்கள் கல்வி கற்று முன்னேறினால் இந்தியா முன்னேறும்'. இவ்வாறு அவர் பேசினார்.

தெய்வானை அம்மாள் கல்லூரியின் சார்பில் டெல்லியில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதுகலை ஆங்கிலத்துறை மாணவி அர்ச்சனா, தேசிய மாணவர் படையின் இணை அதிகாரிக ளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற் கும் விஜய சண்முண்டீஸ்வரி ஆகியோரை அமைச்சர் ஸ்மிருதி இரானி பாராட்டினார்.

முன்னதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் வரவேற்புரை வழங்கினார். தெய் வானை அம்மாள் மகளிர் கல்லூரி யின் முதல்வர் யு.ஏ. அருணகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிறைவாக தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் செயலர் செந்தில் குமார் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x