Published : 26 Feb 2019 09:48 PM
Last Updated : 26 Feb 2019 09:48 PM

சென்னை குற்றச் சம்பவங்கள்

சென்னையில் நடைபெற்ற சில குற்றச்சம்பவங்கள் சில

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மண்டையை உடைத்த பொதுமக்கள்

சென்னை திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பலாத்காரம் செய்ய முயன்ற செல்வராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். சிறுமியின் கூச்சல் சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள் தாக்கியதில் செல்வராஜின் மண்டை உடைந்தது.

மெரினா கடற்கரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்

சென்னை மெரினா கடற்கரையில் தாத்தா - பாட்டியுடன் தூங்கிய 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கொடுத்த காசிமேட்டை சேர்ந்த பெயிண்டர் சீனிவாசனை பொதுமக்கள் பிடித்து, அடித்து உதைத்து மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கே.எம்.சியில் மருத்துவர்கள் ஓய்வறையில் திருட முயன்ற 3 பேர்: ஒருவர் சிக்கினார் இருவர் ஓட்டம்

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் ஓய்வறையில் புகுந்து திருட முயன்ற சேத்துப்பட்டைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய விக்கி, ஆகாஷ் ஆகிய இருவரை கீழ்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

காலில் அடிபட்டது போல் கட்டு கட்டிக்கொண்டு 3 பேரும் , மருத்துவர்கள் ஓய்வறையில் இருந்த பொருட்களை திருடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மருத்துவர்கள் வரவே தப்பி ஓட முயன்றனர். அவர்களை விரட்டியதில் விக்னேஷ் மட்டும் சிக்கினார்.

வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.7.3 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பண்டல் பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7.3 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள், ரூ.57 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  பதுக்கி வைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜவஹர் அலி என்பவர் கைது செய்யப்பட்டார். அசோக் நகரை சேர்ந்த செய்யது அலி என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரை திருவல்லிக்கேணி போலீசார் தேடி வருகின்றனர்.

பயணிபோல் நடித்து ஆட்டோ ஓட்டுநரை தாக்கி கத்தி முனையில் வழிப்பறி: ஒருவர் கைது

சென்னை கோயம்பேட்டில் ஆட்டோவில் பயணம் செய்வது போல் ஏறி, ஆட்டோ ஓட்டுநரிடம் கத்திமுனையில் ரூ.1000 ரொக்கப்பணத்தை பறித்த திருமுல்லைவாயலைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் கைது. 2 கத்திகள் பறிமுதல். தப்பி் ஓடிய கோபிநாத்தின் கூட்டாளிகள் இருவரை கோயம்பேடு போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆந்திராவிலிருந்து மணல் கடத்தல்: 2 டாரஸ் லாரிகள் பிடிபட்டன

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு திருட்டு மணல் ஏற்றி வந்த 2 டாரஸ் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவை சேர்ந்த ரவி, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபு, பெருமாள் , நரேஷ், விஸ்வநாதன் ஆகிய 5 பேர் திருட்டு மணலை கடத்தி சென்னைக்கு வந்தபோது  கொடுங்கையூர் போலீஸார் வாகன சோதனையில் சிக்கினர். அவர்களை  கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

40 கிலோ கேட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னையில் ஒருவர் கைது: மும்பை சுங்கத்துறையினர் நடவடிக்கை

சென்னை பிராட்வேயில் பெரம்பூரை சேர்ந்த ஜெய்னுதீன் (32) என்பவரை டில்லி சுங்கத்துறை உதவி ஆணையர் மல்லிகார்ஜுனா தலைமையிலான அதிகாரிகள் மற்றும், மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

அவரை பிடித்து, பிராட்வேயில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி லாக்கரில் ஜெய்னுதீன் வைத்திருந்த ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். மும்பை விமான நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் 40 கிலோ கேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சென்னை சாந்தோமை சேர்ந்த ஜாபர், சலீம் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளி ஜெய்னுதீன். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஜாபரையும், சலீமையும் சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

வருமான வரித்துறை விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற நபர்

சென்னை, மைலப்பூரை அடுத்தசாந்தோம், அருளானந்தம் தெருவில் வசிப்பவர் முகமது சலிம்(28). இவரை வருமான வரி துறையினர் வழக்கு சம்பந்தமாக நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு உள்ளே வைத்து இரவில் விசாரணை செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது அருகில் உள்ள கண்ணாடியை உடைத்து வயிற்றில் குத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிசிக்சை பெற்று வருகிறார். தற்போது நலமாக உள்ளார்.

ஸ்ப்பீக்கரில் மறைத்து தங்கம் கடத்தல் ஒருவர் கைது

மதிப்புடைய 200 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கக் கட்டிகளை ஸ்பீக்கரில் மறைத்து வைத்து எடுத்து வந்த சென்னையை சேர்ந்த சுரேஷ் (30) என்ற பயணியை சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x