Published : 26 Feb 2019 07:57 AM
Last Updated : 26 Feb 2019 07:57 AM

சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சி பள்ளி மாண வர்களுக்கு காலை சிற்றுண்டி வழங் கும் திட்டத்தை ஆளுநர் பன் வாரிலால் புரோஹித் திருவான் மியூரில் நேற்று தொடங்கி வைத்தார்.

அட்சய பாத்ரா தொண்டு நிறு வனம் சார்பில் திருவான்மியூரில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 1000 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங் கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசிய தாவது:

சமூகநல திட்டங்களை செயல் படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை யில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங் கப்பட்டுள்ளது. குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பாடங்களை சிறப்பாக கற்க முடி யும்.

எனவே தமிழக அரசு, கொடை யாளர்கள், தன்னார்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து, இத்திட்டத்தை சென்னை முழு வதும் செயல்படுத்துவதுடன், திட்டம் தமிழகம் முழுவதும் சென் றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இத்திட்டம் நடப்பு கல்வியாண் டில் 50 ஆயிரம் மாணவர்களுக்கும், அடுத்த கல்வியாண்டில் 20 ஆயி ரம் மாணவர்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் காலையில் இட்லி, உப்புமா, பொங்கல் உடன் சாம்பார் என மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த உணவு அட்சய பாத்ரா நிறுவனத்தால் தயாரித்து மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ், துணை ஆணையர் பி.குமாரவேல் பாண்டியன், ஆல்பி ஜான் வர்கீஸ், அட்சய பாத்ரா நிறுவன துணைத் தலைவர் ஸ்ரீ சஞ்சலப்பதி தாசா உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x