Published : 17 Feb 2019 10:16 PM
Last Updated : 17 Feb 2019 10:16 PM

முற்றிலும் மாறுபட்ட ஒன்றைத்தர வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு: இந்து தமிழ் திசை ஆசிரியர் பேச்சு

முற்றிலும் மாறுபட்ட  ஒன்றைத்தர வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு என  ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் அசோகன் பேசினார்.

பாரம்பரியம் மிக்க `தி இந்து’ குழுமத்திலிருந்து வெளிவரும் `இந்து தமிழ் திசை’ நாளிதழ் `தமிழால் இணைவோம்’ என்ற முழக்கத்துடன் செய்திகளை வழங்குவதுடன், மக்களை இணைக்கும் நிகழ்வுகளையும் முன்னெடுக்கிறது.

அந்த வகையில், தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் கொண்டாடும் `யாதும் தமிழே 2019’ என்ற புதுயுகத் தமிழின் புதுவிதக் கொண்டாட்டம் கோவை அவிநாசி சாலையில், நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்றுநடைபெற்றது. 

நிகழ்ச்சியில் ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் அசோகன் பேசியதாவது:

‘‘ராஜுமுருகன் விருதின் அவசியம், அந்த விருது செய்யக்கூடிய மாயாஜாலம், அதன் பெருமை என அனைத்து அம்சங்களையும் சொல்ல்விட்டார். சில நேரம் விருது சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிவிடுகிறது. விருதை திருப்பிக்கொடுக்கும் நிகழ்வு வருத்தமான ஒன்று. ஆகவே விருதை திருப்பிக் கொடுக்காத ஒரு நிகழ்வாக, விருது இவருக்கு ஏன் கொடுத்தீர்கள் சர்ச்சையாக மாறிவிடக்கூடாது என்கிற அர்த்ததில்தான் விருது வழங்கப்படுகிறது.

பாரம்பரியமிக்க இந்து பத்திரிகையிலிருந்து வந்த நாங்கள் பளபளப்பான பெண் பக்கத்துவீட்டு ஜன்னலை திறந்த கதையாக நாங்கள் தமிழில் வந்தோம். ஒரு வாசகர் குறிப்பிட்டதுபோல் இந்து தமிழில் வந்தபோது அது ஆங்கில வடிவமாக இருக்கு என வாங்கவில்லை, நண்பர் ஒருவர் சொன்னார் இல்லை அதுபோன்று இல்லை இது முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்று கூறியதால் வாங்க ஆரம்பித்தேன் என்றார். அதுதான் எங்கள் இலக்கு. முற்றிலும் மாறுபட்ட வேறுபத்திரிக்கையில் இல்லாத ஒன்றைத்தரவேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு.

அதே எண்ணம்தான் அது என்ன  தி இந்து தமிழ் என்கிற கேள்வி எழுந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப்பின் நாங்கள் தனித்து செயல்பட துவங்கியபோது இந்து தமிழ் திசை என்கிற பெயருக்கு மாறியபோது உடனடியாக அதை வாசகர்கள் ஏற்றுக்கொண்டார். 

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x