Published : 27 Jan 2019 12:19 PM
Last Updated : 27 Jan 2019 12:19 PM

எய்ம்ஸ் மருத்துவமனை செயல்வடிவம் பெற 4 ஆண்டுகள் ஆகும்; ஸ்டாலின் விவரம் தெரியாமல் பேசுகிறார்: தமிழிசை பதில்

எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கி  செயல் வடிவம் பெற குறைந்தது 4 வருடங்களாகும், திமுக தலைவர் ஸ்டாலின் விவரம் தெரியாமல் பேசுகிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பிரதமர் மோடி பதவி ஏற்றபோது இந்தியாவில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை 7 மட்டுமே மாநிலத்திற்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை வழங்க வேண்டும் என்பதே மோடி அரசின் குறிக்கோள் இந்த வரிசையில் 13 மாநிலங்களை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்ட அனுமதியுடன் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை துவங்கும் முன் உள்ள நடைமுறைகள் - முதலில் மாநில அரசு தகுந்த இடத்தை அடையாளம் காண்பித்து அதை மத்திய அரசின் ஆய்வுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும், இதற்கான நிதி ஆதாரம் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டு பின்னரே ஆரம்ப பணிகள் துவங்கும். ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கி  செயல் வடிவம் பெற குறைந்தது 4 வருடங்களாகும்.

 அதற்குமுன் பூர்வாங்க பணிகள் நடைமுறைகள் அரசு விதிகளின் படி சுமார் 2 அல்லது 3 ஆண்டுகளாகும். உதாரணத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் காலத்தில் சுஷ்மா சுவராஜ் சுகாதாரத்துறை அமைச்சராகவும் திமுகவின் A.ராஜா இணை சுகாதாரத்துறை அமைச்சராகவும்இருந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் சத்தீஸ்கர்,ஒரிசா,உத்தரகாண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போதுதான் முழுமையாக இயங்கிவருகின்றன.

திமுகவின் A.ராஜா இணை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பே இப்போதுதான் இறுதி வடிவம் பெறுகின்றது. இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை நடைமுறை சாத்தியம்.

இந்த அடிப்படை விவரம் புரியாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஏன் தாமதம் என்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதாக சொல்வது பொய்,பித்தலாட்டம் என்று கூறினார்.

இப்போது ஏன் தாமதம் என்கிறார் இப்படிப்பட்ட நடைமுறை அறிவாற்றல் இல்லாதவரை (எதிர்கட்சி தலைவரை இப்படி அழைப்பது சரியா?)  நம் பாரதப் பிரதமரை முட்டாள்  என்று அழைப்பவரை வேறு எப்படி அழைப்பது.இதுதான் அவர் சார்ந்த இயக்கத்தின் அரசியல் தராதரம்.தமிழக மக்கள் உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள் .

இவ்வாறு தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x