Published : 25 Jan 2019 09:58 AM
Last Updated : 25 Jan 2019 09:58 AM

நாகையில் சிபிசிஎல் நிறுவனம் ரூ.27,460 கோடி முதலீடு

சென்னையில் 2 நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 304 பெரு நிறுவனங்கள் மற்றும் 12,360 நிறுவனங்களுடன் புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

முக்கியமான முதலீடுகள்

இதில், அதிகபட்சமாக சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் (சிபிசிஎல்) ரூ.27,460 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண் டுள்ளது. இந்நிறுவனம் நாகை மாவட்டத்தில் இந்த முதலீட்டை மேற்கொள்கிறது.

மற்ற நிறுவனங்களின் முதலீடு குறித்த விவரம்:

* நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) விரிவாக்க திட்டத்துக்காக ரூ.23,800 கோடி.

* அதானி குழுமம் காட்டுப் பள்ளி துறைமுகத்தில் ரூ.10,000 கோடி முதலீடு செய்துள்ளது.

* ஹுண்டாய் நிறுவனம் பேட்டரி கார்கள் தயாரிப்பு தொழிற்பிரி வுக்காக ரூ.7,000 கோடி முதலீடு செய்துள்ளது.

* அலையன்ஸ் நிறுவனம் ரூ.9,488 கோடி.

* எம்ஆர்எஃப் நிறுவனம் தொழிற் சாலை விரிவாக்கத்துக்காக ரூ.3,100 கோடி.

* தைவானின் பாக்ஸ்கான் நிறுவ னம் ஸ்மார்ட்போன் தொழிற் சாலைக்காக ரூ.2,500 கோடி முதலீடு.

* எய்ஷர் மோட்டார் நிறுவனம் ரூ.1,500 கோடி.

* பிரான்ஸின் பிஎஸ்ஏ கார் நிறுவனம் ரூ.1,250 கோடி.

* சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.1,200 கோடி.

* காற்றாலை இறக்கை தயாரிக்கும் அமெரிக்க நிறுவ னமான டீபிஐ கம்போசைட்ஸ் ரூ.730 கோடி.

* பிரான்ஸின் செய்ன் கோபைன் நிறுவனம் விரிவாக்கத் திட்டத் துக்காக ரூ.720 கோடி.

* அமெரிக்காவின் வாப்கோ நிறுவனம் ரூ.600 கோடி.

* சாய் பல்கலைக்கழகம் சார்பில் உயர்கல்வித் துறையில் ரூ.590 கோடி முதலீடு.

* பின்லாந்தின் சால்காம் நிறுவ னம் ரூ.500 கோடி.

* டிவிஎஸ் லூக்காஸ் நிறுவனம் ரூ.500 கோடி.

* ஜப்பானின் யன்மார் ரூ.500 கோடி.

* மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில்களில் 12,360 ஒப்பந்தங் கள் மூலம் ரூ.32,206 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.

* பெரு நிறுவனங்களுடன் மட்டும் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x