Published : 22 Sep 2014 01:17 PM
Last Updated : 22 Sep 2014 01:17 PM

ஈரோடு சமூக நலத்துறையில் வேலை: விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு சமூக பணியாளர் பணியிடத்திற்கும், தகவல் பகுப்பாய்வாளர் பணியிலும் சேர தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூகப்பணியாளர் பணிக்கு தொகுப்பூதியமாக ரூ.14 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

உளவியல், சமூகப்பணி மற்றும் சமூகவியல்களில் வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகியவற்றில் பட்டதாரி அல்லது முதுகலைப் பட்டதாரியாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகள் சார்ந்த பணியில் 2 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கலாம். தகவல் பகுப்பாளர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ.14 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.பி.ஏ, பிசிஏ, பிஎஸ்சி கணிதம் பட்டப்படிப்பு பெற்றவர்களாகவோ, ஏதாவது ஒரு நிறுவனத்தில் தகவல் பகுப்பாளராகவோ 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்கலாம். 40 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக்கூடாது. இதற்கான விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட இணையதள முகவரியில் ( >www.erode.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த பதவிகளுக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் அக்டோபர் 8ம் தேதி புதன் மாலை 5.45க்குள், ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சமூக பாதுகாப்புத்துறை, 100, 101 ராணா லட்சுமணன் நகர், குமலன்குட்டை, ஈரோடு 11’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

இத்தகவலை மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x