Published : 29 Jan 2019 09:34 AM
Last Updated : 29 Jan 2019 09:34 AM

திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் லாக்கர்களை உடைத்து 470 பவுன் நகை, ரூ.19 லட்சம் கொள்ளை: பின்புற சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் துணிகரம்

திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் துளையிட்டு வாடிக்கையாளர்களின் 5 லாக்கர் களை உடைத்து 470 பவுன் நகைகள் மற்றும் ரூ.19 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருச்சி சமயபுரம் நம்பர் 1 டோல் கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிச்சாண்டார்கோயில் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கானோர் சேமிப்பு, நடப்புக் கணக்கு வைத்துள்ளனர். கடந்த 25-ம் தேதி பணிகள் முடிந்து வங்கி மூடப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வங்கிக்கு விடுமுறை.

இந்நிலையில், கடப்பாரை, காஸ் சிலிண்டர், வெல்டிங் உபகரணங் களுடன் வந்த மர்ம நபர்கள், வங்கி யின் பின்புற சுவரின் அடிப்பகுதி யில் உள்ள அரளைக் கற்களை ஒவ்வொன்றாக அகற்றியுள்ளனர். அதன் வழியாக சுவரில் துளையிட்டு, சுமார் 2 அடி ஆழத்துக்கு தரையில் பள்ளம் தோண்டி சுரங்கப்பாதை போன்று அமைத்துள்ளனர். அதன் பின், கீழிருந்து மேலாக வங்கியின் தரைத்தளத்தை இடித்துப் பெயர்த் துவிட்டு, அதன்வழியாக லாக்கர்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் புகுந்துள்ளனர்.

காஸ் சிலிண்டரை வங்கியின் சுவருக்கு வெளியே வைத்துவிட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட டியூப் மற்றும் வெல்டிங் உபகரணங்களை மட்டும் உள்ளே கொண்டு சென்றுள் ளனர். அவற்றைப் பயன்படுத்தி 5 லாக்கர்களை உடைத்து, அவற்றில் இருந்த நகைகள், பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த சிலிண்டர், கட்டர், கடப்பாரை, முகமூடி, கையுறை, ஸ்வெட்டர் போன்ற வற்றை அங்கேயே போட்டுவிட்டு, அருகே உள்ள மற்றொரு அறைக் குச் சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த 12 கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க்கை எடுத்துக் கொண்டு, தப்பிச் செல்வதற்காக சுவரின் வேறு பகுதியில் துளையிட்டு, அதன் வழி யாகச் சென்றுவிட்டனர். தப்பிச் சென்ற வழியில் ஆங்காங்கே நகை கள், பணம் சிதறிக் கிடந்தன.

இந்நிலையில் நேற்று காலை பணிக்கு வந்த வங்கிப் பணியாளர் கள் இதைக் கண்டு அதர்ச்சி யடைந்தனர். தகவலறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி லலிதாலட்சுமி, எஸ்.பி ஜியாவுல் ஹக் மற்றும் போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சூரியா ஜமால், உமா மகேஸ்வரி, சுரேஷ்குமார் ஆகி யோர் பெயரிலான தலா 1 லாக்கர், ஜி.கே.இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 2 லாக்கர்கள் என மொத்தம் 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. 3 லாக்கர்களில் 470 பவுன் நகைகள் மற்றும் ரூ.19 லட் சம் ரொக்கமும், மற்ற 2 லாக்கர்க ளில் சொத்து ஆவணங்கள் மட்டும் இருந்ததாக தெரிகிறது.

3 தனிப்படைகள் அமைப்பு

இதுகுறித்து டி.ஐ.ஜி லலிதாலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியபோது, "கொள்ளைபோன நகைகள் எவ்வளவு என மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

அதைத்தொடர்ந்து எஸ்.பி ஜியாவுல் ஹக் செய்தியாளர்களிடம் கூறியபோது, "5 லாக்கர்களில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்பது குறித்து ஆய்வு நடக்கிறது. இப்பணிகள் முடிந்தபிறகே, கொள்ளைபோன நகைகளின் மொத்த மதிப்பு தெரியவரும்.

சிசிடிவி கேமராக்களுக்கான ஹார்டுடிஸ்க்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுவிட்டதால், அரு கில் உள்ள பள்ளி மற்றும் வணிக நிறுவனங்களின் சிசிடிவி கேமராக் களில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து வருகி றோம்" என்றார்.

வங்கியின் கட்டிட அமைப்பு (ப்ளூபிரின்ட்), உள் அறைகளில் என்னென்ன பணிகள் நடைபெறும் என்பது குறித்து நன்கு தெரிந்த நபர்கள்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்க முடியும் என போலீ ஸார் கருதுகின்றனர். அதுதொடர் பாக, வங்கி ஊழியர்கள், ஏற் கெனவே பணியாற்றியவர்கள், அடிக்கடி வந்து செல்லும் வங்கி ஊழியர்களின் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் முற்றுகை

கொள்ளை குறித்த தகவ லறிந்த நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளும் கொள்ளை அடிக்கப் பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் வங்கியின் முன்பு நேற்று திரண்டனர். கொள்ளையடிக்கப்பட்ட லாக்கர்க ளின் எண்கள், அவற்றின் உரிமை யாளர்களின் பெயர்களை ஒரு அட்டையில் எழுதி, வங்கியின் வெளிப்பகுதியில் அதிகாரிகள் தொங்கவிட்டனர். அதற்கு பிறகே, பெரும்பாலான வாடிக்கையாளர் கள் நிம்மதியடைந்தனர்.

அடுத்தடுத்த கொள்ளைச் சம்பவம்

இதேபோல, திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தில் உள்ள இந்தி யன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் பின்புற சுவரை துளையிட்டு ஜன.7-ம் தேதி மர்ம நபர்கள் கொள்ளை யடிக்க முயற்சித்தனர். கடந்த பொங் கல் விடுமுறையின்போது சமயபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளை யின் ஜன்னலை உடைத்து மர்ம நபர் கள் கொள்ளையடிக்க முயற்சித் துள்ளனர். அதைத்தொடர்ந்து ஜன.21-ம் தேதி மண்ணச்சநல்லூ ரில் உள்ள தனியார் நிதி நிறுவனத் தின் முன்புற கதவை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தனர். இவற்றில் தொடர்புடைய குற்ற வாளிகள் இன்னும் கைது செய்யப் படாத நிலையில், தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை நடைபெற்றுள்ளது.

இதே வங்கியின் முன்பகுதி யில் உள்ள ஏடிஎம் மையத்தில் 2013-ல் ரூ.21 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து வங்கிக்கு காவலாளி நியமிக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவ்வங்கியில் கொள்ளை நடந்துள்ளதுபோல அருகே பழூர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் ஜன்னல் பகுதி யில் சுவரைத் துளையிட்டு ரூ.6 ஆயி ரம் மற்றும் பல்வேறு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x