Published : 31 Jan 2019 04:54 PM
Last Updated : 31 Jan 2019 04:54 PM

தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்: இறுதிப் பட்டியலை வெளியிட்டார் தமிழக தேர்தல் அதிகாரி

இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று வெளியிட்டார். தமிழக மொத்த வாக்காளர்கள் 5.91 கோடி பேர் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழக தேர்தல் அதிகாரி தலைமைச் செயலகத்தில் வெளியிட்ட விவரம்:

''கடந்த ஆண்டு  செப்.1 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடமாற்றம் செய்ய 2018- செப்.1 முதல் அக்.31 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பெயர்கள் சேர்க்க 14 லட்சத்து 29 ஆயிரத்து 471 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 13 லட்சத்து 96 ஆயிரத்து 326 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டன.

இடம் மாறுதல், இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு காரணமாக 5 லட்சத்து 62 ஆயிரத்து 937 பெயர்கள் நீக்கப்பட்டன. பதிவுகளில் திருத்தங்கள் செய்யக் கோரி 2 லட்சத்து 21 ஆயிரத்து 351 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 392 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தொகுதிக்குள் முகவரி மாற்றம் கோரி 1 லட்சத்து 26 ஆயிரத்து 920 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 1 லட்சத்து, 22 ஆயிரத்து 301 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு முகவரி மாற்றம் செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தமுறையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

31 ஜனவரி 2019 இறுதி வாக்காளர் பட்டியலின்படிதமிழக மொத்த வாக்காளர்கள் 5.91 கோடி பேர். இதில் ஆண் வாக்களர்கள் 2.92 கோடி. பெண் வாக்காளர்கள் 2.98 கோடி. மூன்றாம் பாலினத்தவர் 5472 பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

31 ஜனவரி 2019 இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழக மொத்த வாக்காளர்கள்- 5 கோடியே, 91 லட்சத்து, 23 ஆயிரத்து, 197 பேர் (5,92,23,197)

ஆண் வாக்காளர்கள்- 2 கோடியே 92 லட்சத்து, 56 ஆயிரத்து, 960 பேர். (2,9256,960)

பெண் வாக்காளர்கள்- 2 கோடியே, 98 லட்சத்து, 60 ஆயிரத்து, 765 பேர் (2,98,60,765)

மூன்றாம் பாலினத்தவர் 5 ஆயிரத்து 472 பேர்.

வயது வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை

18-19  வயதுள்ள வாக்காளர்கள்-    8,98,759   பேர்

20-29  வயதுள்ள வாக்காளர்கள்-  1,18,37,274  பேர்

30-39  வயதுள்ள வாக்காளர்கள் 1,38,55,913  பேர்

40-49  வயதுள்ள வாக்காளர்கள் 1,27,56,864  பேர

50-59  வயதுள்ள வாக்காளர்கள்     95,86,247  பேர்

60-69  வயதுள்ள வாக்காளர்கள்     61,22,460  பேர்

70-79  வயதுள்ள வாக்காளர்கள்     30,53,480  பேர்

80+  வயதுள்ள வாக்காளர்கள்        10,12,200  பேர்

மேற்கண்ட தகவலை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x