Last Updated : 06 Jan, 2019 09:42 AM

 

Published : 06 Jan 2019 09:42 AM
Last Updated : 06 Jan 2019 09:42 AM

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு புயலில் வேரோடு சாய்ந்து சேதமடைந்த தென்னை மரங்களை குழிதோண்டி புதைக்கும் விவசாயிகள்: ‘எங்களுக்குப் பயன்படவில்லை, தோப்புக்காவது உரமாகட்டும்

புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை அகற்ற மனமில்லாமல், தோப்புக்காவது உரமாகட்டும் எனக் கருதி பொக்லைன் உதவியுடன் குழி தோண்டி புதைத்து வருகின்றனர் விவசாயிகள்.

புயல் பாதிப்பால் தஞ்சாவூர் மாவட் டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய பகுதிகளில் 80 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும், 10 லட்சம் தென்னை மரங்கள் தலைப்பகுதி (கொண்டை) மட்டும் முறிந்து சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு நிவாரணமாக தமிழக அரசு ரூ.600-ம், மரத்தை அகற்ற ரூ.500-ம் என ரூ.1,100 வழங்குவதாக அறிவித்தது. இந்த நிவாரணம் போதாது என பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கமாக தினமும் செல்வதுபோல தோப்புகளுக்குச் செல்லும் விவசாயிகள், அகற்றப்படா மல் குப்பை போல கிடக்கும் தென்னை மட்டைகளை எரித்து அகற்றிவரு கின்றனர். மரங்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், மன வேதனை யில் இலவசமாகவாவது எடுத்துச் செல்லுங்கள் என்று பலரிடமும் கூறிவருகின்றனர்.

எப்படியாவது தென்னை மரங் களைத் துண்டு துண்டாக வெட்டி அகற்றினால் போதும் என்ற மனநிலை யில் உள்ள விவசாயிகள், நமக்குதான் பயன்படவில்லை நிலத்துக்காவது உரமாகட்டும் எனக்கருதி பொக்லைன் உதவியுடன் தோப்பில் குழிதோண்டி தென்னை மரங்களைப் புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை நம்பி வயல் கிராமத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி எம்.எஸ்.சிவக்குமார் கூறியதாவது:எனக்கு 20 ஏக்கரில் தென்னந் தோப்பு இருந்தது. கஜா புயலால் 300 தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. ஆயிரம் தென்னை மரங்கள் தலைப்பகுதி ஒடிந்து சேத மடைந்துவிட்டன. சில நூறு தென்னை மரங்கள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவலாக உள்ளன.

செலவானாலும் பரவாயில்லைதினமும் தோப்புக்குச் செல்வது வழக்கம் என்பதால், அப்படிச் சென்று சாய்ந்து கிடக்கும் மரங்களைப் பார்த்தால் மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. பார்த்துப் பார்த்து வளர்த்த மரங்களை யாரோ ஒருவரிடம் கொடுக்கவும் மனமில்லை. சேதமடைந்த தென்னை மரங்களை தீயிட்டு எரித்தால் தோப்பில் உள்ள மற்ற மரங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், செலவானாலும் பரவாயில்லை தோப்புக்கே உர மாக்கிவிடலாம் எனக்கருதி, மரம் அறுக்கும் இயந்திரத்தைக் கொண்டு 10 அடி, 20 அடி துண்டுகளாக்கி பொக்லைன் உதவியுடன் 5 அடி ஆழத்துக்கு குழி தோண்டிப் புதைத்து வருகிறேன்.

ஏற்கெனவே ரசாயன உரங்களால் நிலம் வீணாகிவிட்டது. புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள், மட்டைகளை குழி தோண்டிப் புதைத்தால் 3 ஆண்டுகளில் மக்கி, நிலத்துக்கு சத்தான உரமாகவாவது மாறும்.

சேதமடைந்த தென்னை மரங்களுக் குப் பதிலாக புதிதாக தென்னங்கன்று களை நடும்போது, அந்த கன்று களுக்கு தேவையான உரம் அப்போது கிடைக்கும் என்பதால் இதைச் செய்கிறேன். என்னைப் போலவே பலரும் தற்போது இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கும் அதிகம் செலவுவாகிறது. அரசு அறிவித்த நிவாரணத் தொகையை உடனே வழங்கினால் தோப்புக்கே உர மாக்கும் எங்கள் முயற்சிக்கு உதவியாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x