Published : 05 Jan 2019 07:50 AM
Last Updated : 05 Jan 2019 07:50 AM

ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கும் திட்டம்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்தை இன்று மாலை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் கொண்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று சமீபத்தில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

கடந்த ஆண்டு வரை அரிசி குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே இந்த பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறை தமிழகத்தில் தற்போதுள்ள 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பும் அவற்றை எடுத்துச் செல்ல ஒரு பையும் வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.258 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் தவிர

இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி சட்டப்பேரவையில் உரை யாற்றிய ஆளுநர், ‘‘பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண் டாட பொங்கல் சிறப்பு தொகுப்பு டன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1,000 வழங்கப்படும்’’ என்று அறிவித்தார். இடைத்தேர்தல் நடக்கும் திருவாரூர் மாவட்டத் துக்கு மட்டும் விலக்கு அளிக் கப்பட்டுள்ளது.

இந்த ரூ.1,000 ரொக்கத் தொகையை, நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் சேர்த்து வழங்க தமிழக அரசு முடிவெடுத்து அதற்கான பணிகளை தொடங்கி யுள்ளது. தலைமைச் செயலகத் தில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் சில பயனாளிக ளுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கி இத்திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, திங்கள் முதல் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

வழக்கமாக பொங்கல் சிறப்புத் தொகுப்பு, நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகள் வீதம் பிரிக்கப்பட்டு வழங்கப்படும். அதேபோல் கடைகளில் உள்ள குடும்ப அட்டைகள் எண்ணிக்கை அடிப்படையில், நாளொன்றுக்கு 100, 150 அல்லது 200 அட்டைகள் வீதம் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட எண்கள் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்த நாட்களில் வாங்கிக் கொள்ளும் வகையில் வழங்கப்பட உள்ளது. அவ்வாறு குறிப்பிட்ட நாளில் வாங்க முடியாதவர்களுக்கு, இறுதியாக ஒன்றிரண்டு நாட்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

இதுதொடர்பாக நியாய விலைக் கடை பணியாளர் களுக்கு இன்று சுற்றறிக்கை அனுப்பப்படும் என உணவுத் துறை தரப்பில் கூறப்படு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x