Published : 26 Jan 2019 08:59 AM
Last Updated : 26 Jan 2019 08:59 AM

சிறந்த பணியை பாராட்டி தமிழக போலீஸார் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது

குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றிய போலீஸார், துணை ராணுவத்தினர் என நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 855 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட் டுள்ளது.

இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 2 போலீஸாருக்கு தகை சால் பணிக்கான விருதும், 21 போலீஸாருக்கு பாராட்டத்தக்க பணிக்கான விருதும் அறிவிக்கப் பட்டுள்ளது. அவர்கள் விவரம்:

தகைசால் பணிக்கான விருது பெறுவோர்: பி.கோவிந்தசாமி (டிஎஸ்பி, திருச்சி), இ.சொரிமுத்து (சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர், ஈரோடு).

பாராட்டத்தக்க பணிக்கான விருது பெறுவோர்: சென்னை தெற்கு இணை ஆணையர் சி.மகேஸ்வரி, ராமநாதபுரம் டிஐஜி ந.காமினி, எஸ்.பி. சு.சாந்தி (சென்னை போலீஸ் அகாடமி), பல்லாவரம் உதவி ஆணையர் கேபிஎஸ் தேவராஜ், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் கே.கனகராஜ் ஜோசப், சென்னை ஏஎஸ்பிக்கள் எம்.எம்.அசோக் குமார், கே.ராஜேந்திரன், டிஎஸ்பிக்கள் எஸ்.கேசவன் (சென்னை எஸ்பிசிஐடி), எம்.வெற்றி செழியன் (மதுரை), எஸ்.சங்கர் (சென்னை ஊழல் தடுப்பு துறை), வீராபுரம் உதவி கமான்டன்ட் எம்.ஆறுமுகம், ஆய் வாளர்கள் கே.சங்கர சுப்ரமணியன் (சென்னை ஊழல் தடுப்பு துறை), எஸ்.ஜான் விக்டர் (திருவள்ளூர் மதுவிலக்கு), வி.கணேசன் (காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு துறை).

சென்னை குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஆர்.ஜனார்த்தனன், சிறப்பு எஸ்.ஐ.க்கள் ஜே.உலக நாதன் (சென்னை குற்றப் புல னாய்வு துறை பாதுகாப்பு பிரிவு), பி.முத்துராமலிங்கம் (ராமநாதபுரம் ஊழல் தடுப்பு துறை), ஐ.னிவாசன் (சென்னை ஊழல் தடுப்பு துறை), எச்.குணாளன் (சென்னை ஊழல் தடுப்பு துறை), கே.புருஷோத்தமன் (சென்னை ஊழல் தடுப்பு துறை), தலைமை காவலர் என்.பாஸ்கரன் (சென்னை குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு பிரிவு).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x