Published : 02 Jan 2019 09:47 AM
Last Updated : 02 Jan 2019 09:47 AM

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு

திருவாரூர் தொகுதி இடைத்தேர் தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னையில் செய்தியாளர் களுக்கு வைகோ நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மே 5-ம் தேதியுடன் எங்கள் கட்சி தொடங்கி 25 ஆண்டுகள் முடிவடைந்து, 26-வது ஆண்டு பிறக்கிறது. கட்சியின் அடித் தளத்தை 100 சதவீதம் வலு வாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மொத்தம் உள்ள 66,500 வாக்குச்சாவடிகளில் தலா 5 பேர் கொண்ட பணிக்குழு அமைத்துள்ளோம். இக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு ஆதார் எண், புகைப்படம், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களுடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இவற் றின் ஒரு பிரதியை திமுக தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். தேர்தல் நேரத்தில் தேவைப்படும்போது இவர்களை பயன்படுத்திக் கொள் வதற்குத்தான் இந்த ஏற்பாடு. அடித்தளத்தை வலுப்படுத்து வதால், இந்த ஆண்டு நிராகரிக்க முடியாத பெரிய அரசியல் கட்சியாக மதிமுக பரிணமிக்கும்.

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டப்பேரவையைக் கூட்டி கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும். அதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுவதுடன், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அரசு சார்பில் வழக்கு தொடர வேண்டும். வரும் 4-ம் தேதி நான் வழக்கு தொடரவுள்ளேன்.

மத்தியில் உள்ள பாஜக அரசு, தனது ஆட்சியைத் தக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்ளும். அதை சுலபமாக கருதிவிடக் கூடாது. மக்கள வைத் தேர்தலுக்குப் பிறகு காங்கி ரஸ் கட்சியும், மாநில கட்சி களும் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும். தமிழகத் தில் 20 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்தால், சட்டப் பேரவை பொதுத்தேர்தலை சந்திக்காமலேயே இந்த ஆண்டு திமுக ஆட்சியைப் பிடிக்கும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை இழிவு படுத்தப்படுகிறது. ஐஏஎஸ் அதி காரி ராதாகிருஷ்ணன் அப்பழுக் கற்ற நேர்மையான அதிகாரி. அவரைப் போன்ற அதிகாரிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லா விட்டால், அவர்கள் மத்திய அரசுப் பணிகளுக்கு போய்விடு வார்கள்.

இவ்வாறு வைகோ தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x