Published : 17 Dec 2018 09:30 AM
Last Updated : 17 Dec 2018 09:30 AM

தமிழில் தந்தி அனுப்பும் முறையை கண்டுபிடித்த புலவர் சிவலிங்கம் காலமானார்: அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் 

தமிழில் தந்தி அனுப்பும் முறை யைக் கண்டுபிடித்த புலவர் அ.சிவலிங்கம்(94) திருச்சியில் நேற்று காலமானார். அவரது உடல், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப் பட்டது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் 1924-ல் பிறந்தவர் சிவலிங்கம். இவர், 1944-ல் காரைக்குடியில் அஞ்சல் எழுத்த ராக பணியில் சேர்ந்தார். கறம் பக்குடியில் அஞ்சலகத்தில் பணி யாற்றியபோது 1955-ல் தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்தார்.

தொடர்ந்து, ஈரோட்டில் 1956-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் மாநில மாநாட்டிலும், அதே ஆண்டு குளித்தலையில் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற தமிழ் ஆட்சிமொழி மாநாட்டிலும், 1961-ல் மத்திய அஞ்சல் துறை அமைச்சர் பி.சுப்ப ராயன் முன்னிலையிலும் 33 ஒலிக்குறியீடுகள் மூலம் தமிழில் தந்தி அனுப்பும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்து அனை வரது கவனத்தையும் ஈர்த்தார்.

1960-ல் தனது 36-வது வயதில் புலவர் பட்டமும், 1996-ல் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும் பெற்ற சிவலிங்கம், கர்நாடக இசை பாடுவதிலும், நாடகங்கள் நடிப்பதிலும் தேர்ச்சி பெற்றவர்.

உடல்நலம் பாதிப்பு

திருச்சி கே.கே.நகர் சேஷசாயி நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த சிவலிங்கம், கடந்த சில நாட்களாக மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டில் அவர் உயிரிழந்தார். சிவலிங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அவரது கண்கள் மற்றும் உடல் தானமாக அளிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x