Published : 29 Dec 2018 07:21 AM
Last Updated : 29 Dec 2018 07:21 AM

முதல்வர் பழனிசாமியுடன் சரத்குமார் சந்திப்பு:  பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தல்

முதல்வர் பழனிசாமியை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சந்தித்துப் பேசினார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப் புக்குப் பிறகு செய்தியாளர் களிடம் சரத்குமார் கூறியதாவது:

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தமைக்காக முதல்வருக்கு பாராட்டு தெரிவித் தேன். புயல் பாதித்த பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்தபோது மக்கள் வைத்த கோரிக்கைகளை எடுத்துக் கூறினேன்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக சிவகாசியில் பட்டாசுத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 லட்சத்துக்கும் அதிகமான தொழி லாளர்களின் வாழ்வாதாரம் கேள் விக்குறியாகியுள்ளது. சிவகாசி பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் மனு அளித்துள்ளேன்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட் களுக்கு மாற்று பொருட்களை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். யாருக்கும் பாதிப்பு இல்லாமல் பிளாஸ்டிக் தடையை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகை யில் செயல்பட முடிவு செய் துள்ளோம். அதிமுகவுடன் கூட்ட ணியா என்பதை தேர்தல் அறிவிக் கப்பட்டதும் முடிவு செய்வோம். பாஜக இருக்கும் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இருக்காது.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x