Published : 23 Dec 2018 07:07 AM
Last Updated : 23 Dec 2018 07:07 AM

கம்ப்யூட்டர், செல்போன்களைக் கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு; அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்: தனிமனித உரிமைக்கு எதிரானது என்பதால் திரும்பப் பெற வலியுறுத்தல்

கம்ப்யூட்டர்களை கண்காணிப்பது தொடர்பான மத்திய அரசின் உத்தர வுக்கு அரசியல் கட்சித் தலைவர் கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர். உடனே அந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நாட்டில் உள்ள அனைத்து கம்ப் யூட்டர்களையும் 10 விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் உளவுத்துறை, வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் உள்ளிட்ட 10 விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசியல் கட்சித் தலை வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு: கணினிகளைக் கண்காணிக்கும் விவகாரம் தொடர் பான மத்திய அரசின் உத்தரவு, அடிப்படை உரிமைகளுக்கும், அரசியல் சாசனம் அளித்துள்ள தனிநபர் உரிமைகளுக்கும் முற்றி லும் விரோதமானது. எனவே, இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கண் காணிக்கப்படுகின்ற இந்த நிலையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: அரசியல் சாசன மரபு களை ஆழக் குழிதோண்டிப் புதைத்து, நாடாளுமன்ற ஜனநாய கத்தை படுகுழியில் தள்ளியிருக் கும் மத்திய அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அதற்குள் தாங்கள் விரும்பிய ஒற்றை ஆதிக்க ஆட்சியை நிலைநிறுத்த முனையும் மத்திய அரசின் முயற்சியை முறியடிக்க அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து அணிதிரள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: தனியார் ரகசிய உரி மைகளை அரசுடமையாக்கும் கொடுமை, ஜனநாயகத்தை அழிக் கும் முயற்சிகள் சட்டப்பூர்வமாக அரங்கேற்றப்படுகின்றன. உலகி லேயே அதிகமாக கணினிகளை, செல்போன்களைப் பயன்படுத்தும் நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. எனவே, மக்கள் அனைவரும் கடும் கண்டனம் செய்ய தாமதம் செய்யக் கூடாது. உடனடியாக நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகள், முற்போக்காளர்கள் அணிவகுத்து இதனை முறியடித்து, கருத்துரி மையைக் காக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன்: தனிமனித ரகசியம் என்கிற அரசியல் சட்டம் வழங்கி யுள்ள அடிப்படை உரிமையின் மீதான தாக்குதலாகும். தொலை பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டது குறித்த பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு களுக்கு இது எதிரானதாகும். மத்திய அரசின் இந்த அணுகுமுறையை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: இது குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் சர்வாதி கார நடவடிக்கையாகும். எதிர் கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பொய் வழக்குகளைப் புனைந்து அரசியல் ஆதாயம் தேடவே இந்த உத்தரவு வழிவகுக்கும். இந்த உத்தரவை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: இது அரசியல் சாசனத்தின் அடிப் படையையே தகர்க்கும் முயற்சி யாகும். எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை ஆகிய தனிநபர் சுதந்திரத்தையே கேள்விக்குறி ஆக்குவதாகும். பயங்கரவாதிகள் கம்ப்யூட்டர் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வதைக் கண்டுபிடிக்கவே இந்த அதிகாரிகள் எனச் சொல்லும் காரணம் உண்மைக்குப் புறம்பானது. முற்றிலும் அரசியல் காரணங்களே இதன் பின்னணியில் உள்ளன. எனவே, இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x