Published : 31 Dec 2018 11:38 AM
Last Updated : 31 Dec 2018 11:38 AM

40 லட்சம் ரூபாய் தனி விமானத்தில் பயணிக்கும் சேடிஸ்ட் ஸ்டாலின்: தமிழிசை விமர்சனம்

40 லட்சம் ரூபாய் தனி விமானத்தில் பயணிக்கும் ஸ்டாலின் தான் 'சேடிஸ்ட்' ஸ்டாலின் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மதுரை மாவட்டத்தில் பாஜக சார்பாக நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "இது கூட்டணி காலகட்டம். 1960-களில் தொடங்கி திமுக கூட்டணி இல்லாமல் ஒரு தேர்தலைக் கூட தமிழக மக்கள் சந்தித்தது கிடையாது. தமிழக முதல்வராக கருணாநிதி 5 முறை இருந்திருக்கிறார். இன்றும் கூட கூட்டணி இல்லாமல் திமுகவால் ஒரு பஞ்சாயத்து தேர்தலைக் கூட ஜெயிக்க முடியாது" என பேசினார்.

இதையடுத்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது உதவியாளரின் திருமணத்திற்கு 40 லட்சம் ரூபாய் தனி விமானத்தில் சேலம் செல்கிறார். தான் மட்டும் விமானத்தில் செல்ல வேண்டும். ஆனால், சாமானியன் செல்லக்கூடாது என ஸ்டாலின் நினைக்கிறார். சாமானியன் ஒவ்வொருவரையும் விமானத்தில் செல்ல வைப்பதுதான் மோடியின் சாதனை. எங்கள் மோடியின் சாதனையை அண்ணார்ந்து பாருங்கள் .

அதேபோல், 4 வழிச்சாலை, 8 வழிச்சாலை கூடாது என்கிறார் ஸ்டாலின். 8 வழிச்சாலை வந்தால் 3 மணிநேரத்தில் மக்கள் சேலம் சென்றுவிடலாம். ஆனால், மக்கள் 8-9 மணிநேரம் பயணித்துச் செல்ல வேண்டும். ஸ்டாலின் மட்டும் தனி விமானத்தில் சேலம் செல்ல வேண்டும். 'சேடிஸ்ட்' ஸ்டாலின்'' என தமிழிசை பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x