Published : 19 Dec 2018 08:29 AM
Last Updated : 19 Dec 2018 08:29 AM

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடை பெற்றது. லட்சக்கணக்கான பக்தர் கள் கலந்துகொண்டு நம் பெருமாளை வழிபட்டனர்.

108 வைணவ திவ்ய தேசத் தலங்க ளில் முதன்மையான தலமான ஸ்ரீரங் கம் ஸ்ரீரங்கநாதர் கோயில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுக ளின் நடுவே தீவு போன்ற பகுதி யில் அமைந்துள்ளது. இக்கோயி லில் வீற்றுள்ள ஸ்ரீரங்கநாதருக்கு ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெறுவது சிறப்பு என்றா லும், மார்கழி மாதத்தில் நடை பெறும் திருஅத்யயன உற்சவம் என்று அழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

திருநெடுந்தாண்டகம், பகல் பத்து- திருமொழித் திருநாள் என வும், ராப்பத்து- திருவாய்மொழித் திருநாள் என 21 நாட்கள் நடை பெறும் இந்த விழா டிச.7-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங் கியது. பகல் பத்து திருநாள் 8-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெற்றது. பகல் பத்து திருநாட்க ளில் உற்சவரான நம்பெருமாள் ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்ட பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார்.

பகல் பத்து திருநாளின் 10-ம் திரு நாளான நேற்று முன்தினம் நம்பெரு மாள் பல்வேறு திருவாபரணங் களை அணிந்து ‘மோகினி அலங் காரம்’ எனப்படும் நாச்சியார் திருக் கோலத்தில் எழுந்தருளி பக்தர் களுக்கு சேவை சாதித்தார்.

வைகுண்ட ஏகாதசிப் பெரு விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று அதிகாலை நடைபெற்றது. இதை யொட்டி, நேற்று அதிகாலை 3 மணி முதல் மூலவரான ரங்கநாதர், உற்ச வர் நம்பெருமாள் ஆகியோருக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து, அதிகாலை 4.15 மணியளவில் ரத்தின அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை உள்ளிட்ட திருவாபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் நம்பெரு மாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சந்தனு மண்டபம், ராஜ மகேந்திரன் திருச்சுற்று, நாழிக் கேட்டான் வாயில், தங்கக் கொடி மரம் வழியாக, பிரதட்சணமாக 2-ம் பிரகாரமான குலசேகரன் திருச் சுற்று வழியாக விரஜா நதி மண்ட பத்தை வந்தடைந்தார். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்களை ஓதினர்.

இதைத்தொடர்ந்து, அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக நம்பெருமாள் வெளியே வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா', 'ரங்கநாதா' என பக்திப் பரவசத் துடன் கோஷமிட்டு வழிபட்டனர்.

சொர்க்கவாசலைக் கடந்து வந்த நம்பெருமாள் சந்திர புஷ்கரணி, ராமர் சன்னதி, நடைப்பந்தல் வழி யாக 5-ம் பிரகாரம் எனப்படும் திருக்கொட்டகைப் பகுதிக்கு வந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சாதரா மரியாதை செய்யப்பட்டது. பின்னர், ஆயிரங்கால் மண்டபத் துக்கு வந்த நம்பெருமாளுக்கு அலங்காரம், அமுது செய்யப் பட்டது. தொடர்ந்து நம்பெருமாள், பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

இதைத்தொடர்ந்து, மாலையில் அரையர் சேவை, இரவு திருப் பாவாடை கோஷ்டி, வெள்ளிச் சம்பா அமுது செய்தல் உள்ளிட் டவை நடைபெற்று, நள்ளிரவு 12 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வீணை வாத்தியத்துடன் புறப்பாடாகி நம்பெருமாள் மூல ஸ்தானத்தைச் சென்றடைந்தார்.

2 லட்சம் பக்தர்கள்

சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி நேற்று முன்தினம் பிற்பகல் முதலே வெளியூர், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், முதியவர்களும் நீண்ட வரிசை யில் காத்திருத்து மூலவரை தரிசித்து, பின்னர் பரமபதவாசல் வழியாக வந்து நம்பெருமாளை வழிபட்டனர்.

நேற்று ஒரு நாள் மட்டும் 2 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x