Published : 19 Dec 2018 09:32 AM
Last Updated : 19 Dec 2018 09:32 AM

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பார்த்தசாரதி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு; பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷத்துடன் சுவாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பார்த்தசாரதி கோயிலில் நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப் பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர் கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத் தலமாக சென்னை திருவல்லிகேணி யில் உள்ள பார்த்தசாரதி கோயில் உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் நேற்று முன் தினம் நள்ளிரவு 1 மணி முதல் கோயிலுக்கு வரத் தொடங்கினர். அதிகாலை 2.30 மணிக்கு உற்சவ ருக்கு முத்தங்கி சேவை நடந்தது.

உற்சவருக்கு மகா மண்டபத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, அதி காலை 2.45 முதல் 4 மணி வரை வைர அங்கி சேவை நடந்தது.

இதையடுத்து, உற்சவர் ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி மகா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பரமபத வாசலுக்கு கொண்டு வரப் பட்டார். காலை 4.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணைப் பிளக்கும் அளவுக்கு ‘கோவிந்தா கோவிந்தா’ என்று பக்தி பரவசத்துடன் முழக்கங்களை எழுப்பி சுவாமியை தரிசித்தனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நம்மாழ்வா ருக்கு காட்சி தருதலும், ‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ நம்மாழ் வாருக்கு மரியாதையும், வேத திவ்ய பிரபந்தமும் ஓதப்பட்டது. காலை 5.10 மணி முதல் திருவாய் மொழி மண்டபத்தில் 3 சுற்றுகள் உற்சவர் பக்தி உலா நடத்தப்பட்டு திருவாய் மொழியின் மேல் மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில் வைர அங்கியுடன் உற்சவர் காட்சியளித்தார்.

காலை 6 மணியளவில் சிறப்பு காணிக்கை தரிசன கட்டணம் ரூ.100 செலுத்திய பக்தர்கள் பின் கோபுர வாசல் வழியாகவும், கட்டணமின்றி பொது தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் முன் கோபுர வாசல் வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று இரவு 10 மணிக்கு உற்சவ ருக்கு அலங்கார திருமஞ்சனமும், இரவு 12 மணிக்கு நம்மாழ்வாருடன் பெரிய மாட வீதியில் திருவீதி உலா வும் நடைபெற்றது. பக்தர்கள் நேற்று நாள் முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

இன்றுமுதல் 26-ம் தேதி வரை மாலை 5.30 மணிக்கும், வரும் 27-ம் தேதி காலை 9 மணிக்கும் பரம பதவாசல் சேவை நடைபெறும்.

இதற்கிடையே, தென் மாட வீதி யில் உள்ள கோயில் நூலகத்தின் அருகிலும், கோயிலின் பின்புறத் திலும் வைக்கப்பட்டிருந்த 2 எல்இடி திரைகளிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிகளைப் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்தனர்.

பக்தர்களின் வசதிக்காக மயிலாப்பூர், பாரிமுனை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட் டன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீ ஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். கோயிலின் உள் பகுதி யில் 30 சிசிடிவி கேமராக்களும், வெளியில் 15 கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.

இவற்றின் மூலமும் போலீஸார் கண்காணிப்புப் பணிகளை மேற் கொண்டனர். தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

தமிழகம் முழுவதும் உள்ள வைணவ கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x